செவ்வாய் 10, டிசம்பர் 2024  
img
img

முதலில் வெற்றி பெறுவோம்
வியாழன் 17 நவம்பர் 2022 14:26:42

img

கோலசிலாங்கூர், நவ. 16-

முதலில் வெற்றியை பற்றி சிந்திப்போம். அதன் பிறகு தேமு அமைச்சரவையை பற்றி சிந்திப்போம் என பராமரிப்பு அரசாங்க பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார். இந்த முறை தேசிய முன்னணி ஆட்சியை கைப்பற்றினால் மிக குறைந்த எண்ணிக்கையிலான  அமைச்சரவையை கொண்டு வருவோம் என்றார் அவர்.

வெற்றி கிடைத்தால் தான் எதுவும்

முதலில் வெற்றி பெற வேண்டியது அவசியம். அப்படி நாம் வெற்றி பெறாமல் போனால் நான் பிரதமர் ஆக முடியாது. எனவே தேமு கூட்டணியின் வெற்றி நிச்சயம். அப்படி ஒரு வெற்றி கிடைத்தால் அனைவரின் நலனையும் உள்ளடக்கிய முடிவுகள் எடுக்கப்படும். இப்போதைய அமைச்சரவை மிகப்பெரியது என்பதை நானும் ஒப்புக் கொள்கிறேன். இதை நான் குறைப்பேன். இது எனது உறுதி மொழி. அமைச்சர்கள் யார் என்பதை நான்தான் முடிவு செய்வேன் என்றார் அவர். நேற்று முன்தினம் இரவு இங்கே புஞ்சாக் அலாமில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் கோலசிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ தெங்கு அப்துல் அஜிஸும் கலந்து கொண்டார்.

கொள்கை அறிக்கை காப்பியடிப்பா?

வெளிநாட்டு ஆடவர்களை மணந்து கொண்ட மலேசிய தாய்மார்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கும் முடிவு உட்பட பெரிக்காத்தான் கொள்கை அறிக்கையை பாரிசான் அப்படியே காப்பியடித்துள்ளது என்று கூறப்படும் குற்றச்சாட்டு பற்றி கேட்ட போது இதையே நாங்கள் பதிலுக்கு கூறலாம் என்றார் இஸ்மாயில் சப்ரி. கோலசிலாங்கூரில் தெங்கு சப்ரிக்கு வெற்றி வாய்ப்பு சிறப்பாக இருக்கிறது என்றும் கூறிய அவர் நிச்சயமாக அடுத்த அமைச்சரவையில் அவருக்கு இடமுண்டு என்றார். அடுத்த அரசாங்கம் ஒரு பிளவு பட்ட அரசாங்கமாக இல்லாமல் எல்லாரையும் உள்ளடக்கிய ஓர் அரசாங்கமாக விளங்கும் தேமு அதனை செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார். நான்தான் பிரதமர் வேட்பாளர். அதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. எதிர்க்கட்சி உறுப்பினர்களும் மலேசியர்கள் தான். அவர்களும் மலேசிய குடும்பத்தின் ஓர் அங்கம்தான் என்றார் அவர்.

எல்லோரையும் உள்ளடக்குவோம்

எனவே ஒரு மோதல் அரசியல் பிளவு அரசியல் இல்லாமல் எல்லோரும் ஒன்றுபடும் அரசியலையும் அரசாங்கத்தையும் நாம் அமைப்போம். அடுத்தாண்டு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. உலகளாவிய பொருளாதார மந்த நிலை மலேசியாவையும் பாதிக்கும். அதை எதிர் கொள்கின்ற ஆற்றல் நமக்கு வேண்டும் என்றார் அவர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img