வியாழன் 12, டிசம்பர் 2024  
img
img

கோவிட்- 19 காலத்தின்போது வாழ்வாதாரத்தை இழந்திருந்த எங்களுக்கு
புதன் 16 நவம்பர் 2022 13:49:10

img

பந்திங், நவ. 16-

கோவிட்-19 பெருந்தொற்று மிக மோசமான அளவில்  பரவியிருந்த  காலகட்டத்தின்போது அதிரடியான பொருளாதார உதவித்திட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்த  தேசிய மீட்சி மன்றத்தின் திட்டங்கள் மீண்டும் தொடரப்பட வேண்டும். இம்மன்றத்தின் வழியாக ஏற்படுத்தப்பட்டிருந்த  உதவித்திட்டமானது  மிகவும் வறிய நிலையில் இருந்து வந்த பி40 பிரிவைச் சேர்ந்த எங்களைப்போன்ற பல்லாயிரம் பேருக்கு  பேருதவியாக இருந்தது என்பதால் இத்திட்டம் மேலும் தொடரப்பட வேண்டும் என கோலலங்காட் மற்றும் சிப்பாங் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் மலேசிய நண்பனிடம் தெரிவித்துள்ளனர்.

கோவிட் -19 பெருந்தொற்று கடுமையாகப் பரவியிருந்த கால கட்டத்தின்போது வேலையை மட்டுமல்லாது அதனால் வருமானத்தையும் இழந்து குறைந்த வருமானம் பெற்று வருவோருக்கு கை கொடுக்கும் வகையில்  உதவிகளை வழங்கிய அரசாங்கத்திற்கு முதலில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளதாக மு.அல்லி, சக்திவிசு ராயமுனியாண்டி, ப.தேவி, ப.வனித்தா, ஜெ.பிரியமதா ஆகியோர் தெரிவித்தனர்.

குறிப்பாக அக்கால கட்டத்தின்போது வாழ்க்கை செலவுகளுடன் பொருட்களின் விலைவாசி மலைபோல் உயரத் தொடங்கியபோது  அதனை சமாளிப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தாலும் பொருளாதாரத்தில் பழைய நிலைமைக்கு திரும்ப முடியாத நிலையில் அல்லல் பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் உதவித்தொகையினை வழங்குவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டபோது நாங்கள் எதிர்நோக்கியிருந்த பொருளாதாரச் சுமையில் ஒரு பகுதியை உடனடியாக சமாளிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டது. அவற்றில் மின்சாரம், குடிநீர்,  கைபேசி போன்ற முக்கிய மாதாந்திர கட்டணங்களை செலுத்தியதுடன்  குடும்பத்தில் ஏற்பட்டு வந்த உணவுத் தட்டுப்பாட்டுப் பிரச்சினைக்கும் தற்காலிக தீர்வினை காண முடிந்ததாக மேலும் கூறினர்.

இதனிடையே தேசிய மீட்சி மன்றத்தின் மூலமாக ஏற்படுத்தப்பட்டிருந்த உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் வாயிலாக சமூக நல இலாகாவில் மாதாந்திர உதவித்தொகையாக வெள்ளி முந்நூறு பெற்று வந்தவர்களுக்கு வெள்ளி ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது என்றாலும் அத்தொகை அனைவருக்கும் வழங்கப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் தற்போது அத்தொகையினை பெறுவதற்கு தகுதி பெற்றிருந்த பலருக்கு அந்த வாய்ப்புகள் நிறுத்தப்பட்டு விட்டதாகக் கூறும் சு.தேன்மொழி, லெ.மாரிமுத்து, சு.காஞ்சனா, சு.பவாணி, சிவாணி, மாரியாயி ஆகியோர் இன்னமும் பொருளாதார சிக்கலில் சிக்கியிருக்கும் குறைந்த வருமானம் பெற்றுவரும் எங்களைப் போன்றோருக்கு இது போன்ற உதவித் திட்டங்களை அரசாங்கம் தொடர்ந்து வழங்கி வர வேண்டும் என கருத்துரைத்தனர்.

தற்போது நாட்டில்  மிகவும் மோசமான அளவிற்கு அதிகரித்துவரும்  வறிய நிலையில் உள்ளவர்களின் எண்ணிக்கைக்கான காரணம் குறைந்த வருமானம் மட்டுமல்லாமல் பொருட்களின் விலையுடன் அதனால் அதிகரித்து வாழ்க்கைச் செலவுகள்தான். இதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையினை அரசாங்கம் மேற்கொள்வதுடன் மக்களுக்கான பல அனுகூலங்கள் யாவற்றையும் ஒருமுகப்படுத்துதல் அவசியமாகும் என கூறும் ராமதாஸ், குமார், சக்திவிசு, ரா.கீர்த்தி வர்மன் குறிப்பாக சமூக நல இலாகாவில் மாத்தாதிர உதவித்தொகையினை பெற்று வருவோருக்கான உதவித்தொகையுடன் அரசாங்கத்தின் சிறப்பு அனுகூலத் தொகையினையும் சேர்த்து வழங்குவதன் மூலம் குறைந்த வருமானம் அல்லது வருமானமே இல்லாத பலருக்கு பேருதவியாக இருக்குமென  கூறிய இவர்கள் தற்போது இவ்வாறான நடைமுறையினை மேற்கொள்வதற்கான முயற்சியினை மேற்கொண்டுவரும் தேசிய மீட்சி மன்றத்தின் நடவடிக்கை பாராட்டிற்கு உரியதாகும் என மேலும் தெரிவித்தனர்

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img