வெள்ளி 13, டிசம்பர் 2024  
img
img

222 நாடாளுமன்றத் தொகுதிகளில் 945 வேட்பாளர்கள் போட்டி
ஞாயிறு 06 நவம்பர் 2022 17:12:14

img

கோலாலம்பூர், நவ. 6-
நாட்டின் 15 ஆவது பொதுத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று நடைபெற்று முடிந்த வேளையில், நாடு முழுவதும் 222 நாடாளுமன்றத் தொகுதிகளில் 945 வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர். இம்முறை தேர்தலின் வெற்றி பிரதமர் வேட்பாளரை மையமாக வைத்தே தீர்மானிக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

தேசிய முன்னணியின் பிரதமர் வேட்பாளர் தாமே என்பதை நடப்பு இடைக்கால பிரதமரான டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மறுஉறுதிப்படுத்தியிருக்கின்றார். எனினும், அம்னோ தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அஹ்மட் ஜாஹிட் ஹமிடி அடுத்த பிரதமராகும் முயற்சியாக சப்ரியின் ஆதரவாளர்களை இத்தேர்தலில் ஓரங்கட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருக்கும் ஜாஹிட் ஹாமிடியை வாக்காளர்கள் புறக்கணிப்பதாக ஓர் ஆய்வு காட்டுகிறது. எதிர்க்கட்சி தரப்பில் நம்பிக்கைக் கூட்டணி தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதன் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். மற்ற பிரதமர் வேட்பாளர்களில் தேசியக் கூட்டணி தலைவர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் மற்றும் பெஜுவாங் கட்சியின் துன் டாக்டர் மகாதீர் முகமட் ஆகியோர் அடங்குவர்.

இந்நிலையில், இந்த 15 ஆவது பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளரை முன்நிறுத்தியே வாக்காளர்கள் வெற்றி, தோல்வியை நிர்ணயம் செய்வார்கள் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. இம்முறை தேர்தலில் அதிகமான வேட்பாளர்கள் களம் இறங்கியிருப்பதைக் காண முடிகிறது. கோலாலம்பூர், புத்ராஜெயா, லாபுவான் கூட்டரசுப் பிரதேசம் உட்பட 14 மாநிலங்களில் காலை 9.00 மணி தொடக்கம் 10.00 மணிவரை ஒரு மணி நேரம் நடைபெற்ற நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கலில் 945 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

அவற்றின் நிலவரங்கள் கீழ்வருமாறு:

* ஜொகூரில் 96 வேட்பாளர்கள் (26 தொகுதிகள்);
* கெடாவில் 68 வேட்பாளர்கள் (15 தொகுதிகள்);
* கிளந்தானில் 63 வேட்பாளர்கள் (14 தொகுதிகள்);
* மலாக்காவில் 25 வேட்பாளர்கள் (6 தொகுதிகள்);
* நெகிரி செம்பிலானில் 35 வேட்பாளர்கள் (8 தொகுதிகள்);
* பகாங்கில் 55 வேட்பாளர்கள் (14 தொகுதிகள்);
* பினாங்கில் 58 வேட்பாளர்கள் (13 தொகுதிகள்);
* பேராவில் 100 வேட்பாளர்கள் (24 தொகுதிகள்);
* பெர்லிஸில் 13 வேட்பாளர்கள் (3 தொகுதிகள்);
* சிலாங்கூரில் 124 வேட்பாளர்கள் (22 தொகுதிகள்);
* திரெங்கானுவில் 33 வேட்பாளர்கள் (8 தொகுதிகள்);
* சபாவில் 119 வேட்பாளர்கள் (25 தொகுதிகள்);
* சரவாவில் 92 வேட்பாளர்கள் (31 தொகுதிகள்);
* கோலாலம்பூர் கூ..பி.யில் 52 வேட்பாளர்கள் (11 தொகுதிகள்);
* லாபுவானில் கூ.பி.யில் 6 வேட்பாளர்கள் (ஒரே தொகுதி); மற்றும்
* புத்ராஜெயா கூ.பி. 6 வேட்பாளர்கள் (ஒரே தொகுதி) ஆகியனவாகும்.

ஆகக்கூடுதலாக சிலாங்கூரில் 124 வேட்பாளர்களும் ஆகக்குறைவாக லாபுவான், புத்ராஜெயாவில் தலா 6 வேட்பாளர்களும் இப்பட்டியலில் அடங்குவர்.

மிகவும் அதிகமாக 10 வேட்பாளர்கள் போட்டியிடும் ஒரு தொகுதியாக கோலாலம்பூர், பத்து தொகுதி சாதனை படைத்துள்ளது.

இதனிடையே, பேரா மாநிலத்தில் 59, பகாங்கில் 42 மற்றும் பெர்லிசில் 15 என மொத்தம் 116 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கலும் நேற்று நடைபெற்றது.

தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் கனி சாலே இது பற்றி நிருபர்களிடம் பேசுகையில், வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு எந்த ஒரு வேட்பாளரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்படவில்லை என்றும் ஆனால், ஆறு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன் என்றும் தெரிவித்தார்.

சட்டமன்றத் தொகுதிகளில் என்47 செண்டரியாங் தொகுதியிலேயே மிகவும் அதிகமாக ஏழு முனைப்போட்டி நிலவுகிறது. சபா, புகாயா சட்டமன்றத் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலிலும் எழுவர் போட்டியிடுகின்றனர் என்றார் அவர். நேற்று தொடங்கி 14 நாட்களுக்கு தேர்தல் பிரச்சாரம் நடைபெறும். வாக்களிப்பு  நவம்பர் 19 ஆம் தேதி. முன்கூட்டியே வாக்களிக்கும் நடவடிக்கை நவம்பர் 15 ஆம் தேதி மேற்கொள்ளப்படும்.     

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img