வியாழன் 12, டிசம்பர் 2024  
img
img

தெளிவான கொள்கை திட்டம் தேவை முதலீட்டாளர்களின் நம்பிக்கை நிலைநாட்டப்பட வேண்டும்
செவ்வாய் 18 அக்டோபர் 2022 09:05:57

img

முதலீட்டாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரின் நம்பிக்கையினை நிலைநாட்டுவதற்கு ஒரு தெளிவான கொள்கைத் திட்டம் தேவை என தேசிய மீட்சி மன்றத்தின் உறுப்பினர் டத்தோ மைக்கல் காங் வலியுறுத்தினார். நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு திட்டத்திலும் ஒரு தெளிவு இருக்க வேண்டும். நிச்சயமற்றத் தன்மை என்பது பல்வேறு குழப்பங்களுக்கும் குளறுபடிகளுக்கும் வித்திடலாம். முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதில் தயக்கம் காட்டுவதாக நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்புக் கூட்டத்தில் விவரித்தார்.

நாம் உரிய காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்காவிடில் மேலும் மேலும் பல நிறுவனங்கள் இழுத்து மூட வேண்டிய நிலை ஏற்படலாம் என்று தேசிய மீட்சி மன்றத்தின் தலைவர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் அபாய சங்கொலி எழுப்பியிருந்தார். நீண்ட நெடிய  தேவையில்லா கட்டுப்பாடுகளை ஒதிக்கி வைக்குமாறு தேசிய மீட்சி மன்றத்திற்கு GREEN LANE  ஒரு தேவை எனவும் மன்றத்தின் தலைவர் வலியுறுத்தினார். இது குறித்து கருத்துரைத்த மன்றத்தின் உறுப்பினர் டத்தோ மைக்கல் காங் நாம் தீர்வை நோக்கி  முன்னோக்கி செல்வதற்கு இதுபோன்ற தடைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் விடை கொடுக்க வேண்டிய தருணம் வந்து   விட்டது என்றார்.

மலேசிய SME தொழிலின் நிலவடிவமைப்பை மேம்படுத்துவதில் அயராது பாடுபட்டு வருபவர் இவர். சிறு மற்றும் மத்திய தொழில் துறையினருக்கு பல்வேறு அனுகூலங்கள் பட்ஜெட்டில் காணப்படுவதையும் இவர் குறிப்பிட்டார். வரி குறைப்பு 15 விழுக்காடாக குறைந்துள்ளது. பொதுத் தேர்தலுக்கு பிறகு தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் எஸ்எம்இ தொழில் துறையினருக்கான அனுகூலங்கள் நிறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் நிலைத்தன்மை என்பது ஓர் அத்தியாவசிய அம்சமாகும்.
15ஆவது பொதுத் தேர்தல் வரவிருக்கிறது. அடிக்கடி ஆட்சி மாற்றம்  உகந்த சூழலை உருவாக்குவதற்கு  உதவாது. எனவே அரசியல் நிலைத்தன்மை அவசியம் என்றும்  இவர் வலியுறுத்தினார்.

இதுநாள் வரையில் தேசிய மீட்சி மன்றம் மேற்கொண்டு வரும் ஆக்ககரமான நடவடிக்கைகளை இவர் விவரித்தார். 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21ஆம்தேதி தேசிய மீட்சி மன்றம் தோற்றுவிக்கப்பட்டது. கோவிட்-19 பெருந்தொற்று பொருளாதார துறையினை பொறுத்தவரையில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரத்தை எம்பிஎன் என்ற தேசிய மீட்சி மன்றம் கடுமையாக கருதுகிறது. சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர் கடுமையான பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். எம்பிஎன் மீட்சி மன்றம் கூட்டங்களில் இவ்விவகாரம் அடிக்கடி விவாதிக்கப்படும் என மலேசிய மக்களின் மகிழ்ச்சிகரமான நல்வாழ்விற்கான திட்டங்களின் வெற்றியினை உறுதிப்படுத்துவது எங்களின் பிரதான நோக்கமாகும். அனைத்து தரப்பின் ஒப்பற்ற ஒத்துழைப்புடன் மீட்சி மன்றத்தின் பயணம் வெற்றிகரமாக அமையும். இது குறித்து மேலும் விவரம் பெற விரும்புவோர்  www.pemulihannegara>. gov.my என்ற அகப்பக்கத்தை வலம் வரலாம்.

சில தொழில்துறையினர் சட்ட நடவடிக்கை எதிர்நோக்க வேண்டிய சூழ்நிலை குறித்தும் டத்தோ மைக்கல் காங் நினைவு கூர்ந்தார். எஸ்எம்இ சிறு, நடுத்தர தொழில்கள் நாட்டின் பொருளாதாரத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு ஆற்றி வருகிறது. வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது. வருமானத்திற்கு வழிவகுக்கிறது. ஏற்றுமதி ஏறுமுகம் காண்கிறது என்று டத்தோ மைக்கல் காங் இத்தகைய தொழிலின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது. தொழிலாளர் பற்றாக்குறைக்கு பரிகாரம் காண்பது ஓர் அவசர அவசியமாகும். நமக்கு தேவைப்படுவது 15 லட்சம் அந்நியத் தொழிலாளர்கள். தொழிலாளர் பற்றாக்குறையானால் தொழில்துறை நிர்மூலமாக்கி விடும். 2021ஆம் ஆண்டு தொழிலாளர் பற்றாக்குறையால் நாடு எதிர்நோக்கிய இழப்பு ஏறத்தாழ வெ.20 பில்லியன்.
இவ்வாண்டு செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி வரையில் 76,000 அந்நியத் தொழிலாளர்கள் இங்கு வந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளது.

அந்நியத் தொழிலாளர்களை தருவிப்பது என்பது துரித கதியில் நடத்தப்பட வேண்டும். ஆள்பலம் என்பது ஓர் அவசர தேவையாகும். தேவையில்லா தாமதம் தவிர்க்கப்பட வேண்டும். குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு அவசரகதியில் அங்கீகாரம் வழங்கிய பிறகு எஞ்சியவர்களை கொண்டு வருவதில் வழக்கமான நடைமுறையினை கடைப்பிடிக்கலாம். தொழில்துறை மீண்டும் துவக்கம் காண்பதற்கு நாம் முன்னுரிமை வழங்க வேண்டும். ரிங்கிட் நாணய மதிப்பு வீழ்ச்சி கண்டு வருகிறது. யுஎஸ் டாலர் வலுவடைந்து வருகிறது. எஸ்எம்இ தொழில் துறையினர் மூலப் பொருட்களை கொள்முதல் செய்வதில் அதிக செலவினத்தை எதிர்நோக்க வேண்டியுள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பின் இக்கட்டான மற்றும் தர்மசங்கடமான நிலைக்கு தக்க தீர்வு காணப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் என்று தேசிய மீட்சி மன்றத்தின் உறுப்பினர் டத்தோ மைக்கல் காங் அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டார்.

குறு சிறு மற்றும் மத்திய தொழில் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வங்கிகளின் அணுகூலமும் ஆதரவும் போதிய அளவில் உள்ளதா என்று வினவியபோது இவர் பின்வருமாறு விவரித்தார். சிறு தொழில்துறையினர் கட்டடத்திற்கு வாடகை செலுத்த இயலாத நிலை. திவாலுக்கு ஆளாகுவோர் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. ரொக்க பற்றாக்குறை பிரதான பிரச்சினையா? கையில் அறவே காசு இல்லை என்றால் அடுத்த கட்டடத்திற்கு இவர்கள் எவ்வாறு நகர்வது என்று டத்தோ மைக்கல் காங் வினவினார். நாள்தோறும் திவால் ஆனவர்களின் எண்ணிக்கை 26. கடன் செலுத்துவதை ஒத்தி வைப்பது மற்றும் வட்டியில்லா கடன் வசதிகளை ஏற்படுத்தித் தருவது ஆகிய அனுகூலங்களை வங்கிகள் வழங்குவதில் ஒரு வரம்பு உண்டு. வங்கிகளும் தொழில் செய்பவர்கள் என்று டத்தோ மைக்கல் காங் கோடிக் காட்டினார்.

வங்கிகள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கான சமூக கடப்பாடு அல்லது பரிவுமிக்க திட்டத்தை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு அரசு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று டத்தோ மைக்கல் காங் கேட்டுக் கொண்டார். இதன் தொடர்பில் பிரத்தியேகமான வழிமுறைகளை முன்னிலைப்படுத்த அரசு முன்வர வேண்டும். பல்வேறு பரிந்துரைகளை மீட்சி மன்றம் தக்க தரப்பின் பார்வைக்கு கொண்டு சென்றுள்ளது. சுற்றுலாத்துறை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. சுற்றுலாக்காரர்களை சுண்டி இழுக்கும் வகையில் குடிநுழைவு இலாகா தனது கதவுகளை தாராளமாக திறந்துவிட வேண்டும். சுற்றுலாத்துறை மீண்டும் எழுச்சி பெறுவதற்கு அவசரகதி நடவடிக்கைகள் அவசியம்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img