திங்கள் 02, டிசம்பர் 2024  
img
img

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது
செவ்வாய் 11 அக்டோபர் 2022 12:41:47

img

கோலாலம்பூர், அக். 11-

நாட்டின் 15 ஆவது பொதுத்தேர்தல் எப்போது என்ற பல மாத கால ஆரூடங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்  வகையில் மலேசிய நாடாளுமன்றம் நேற்று கலைக்கப்பட்ட நிலையில், வேட்புமனு தாக்கல் மற்றும் வாக்களிப்புக்கான தேதி குறித்த தேர்தல் ஆணையத்தின் அடுத்த கட்ட அறிவிப்பிற்கு மக்கள் காத்திருக்கின்றனர். தேர்தல் வரையில் நடப்பு அரசாங்கமே பராமரிப்பு அரசாங்கமாக செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் ஆணையம் இவ்வாரத்தில் இது தொடர்பான அறிக்கையை வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட 60 நாட்களில் தேர்தலை நடத்தியாக வேண்டும்.
நாடாளுமன்றம் கலைக்கப்படுவது குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்று மாலை 3.00 மணியளவில் அறிவித்தார். ஞாயிற்றுக்கிழமை பகலில் மாட்சிமை தங்கிய மாமன்னரை தாம் சந்தித்ததாகவும் அவரின் இணக்கத்துடன் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாகவும் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.

கடுமையான வெள்ளம் ஏற்படலாம் என்ற ஆரூடங்களுக்கு மத்தியில் திடீரென தேர்தல் அறிவிப்பு வந்திருப்பது வெள்ள எச்சரிக்கைகள் பற்றியெல்லாம் அம்னோ கவலைப்படவில்லை என்பதைக் காட்டுவதாக அக்கட்சியின் ஓர் அறிக்கை நேற்று குறிப்பிட்டது. தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்துள்ள அம்னோ, மக்களின் உயிருடன் விளையாடுகிறது. இதற்காகவே தேர்தலில் அம்னோவை வாக்காளர்கள் தண்டிக்க வேண்டும் என அந்த அறிக்கை மேலும் தெரிவித்தது.

இவ்வாண்டு தேர்தலை நடத்த வேண்டும் என்ற அம்னோவின் கோரிக்கையை நம்பிக்கைக் கூட்டணி, தேசியக் கூட்டணி இரண்டுமே நிராகரித்து வந்துள்ளன.தங்கள் வசம் உள்ள ஆறு மாநில அரசாங்கங்கள் இத்தேர்தலுக்காக கலைக்கப்படாது என்பதையும் அவை திட்டவட்டமாகக் கூறி வந்துள்ளன.

 

இனி என்ன?

வேட்புமனு தாக்கல் மற்றும் வாக்களிப்பு தினத்திற்கு இடைப்பட்ட காலத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படும். அரசு சேவை துறையைப் பொறுத்த வரையில், போலீஸ் படை உள்ளிட்ட மற்ற அதிகாரப் பணிகளும் வழக்கம்போல மேற்கொள்ளப்படும். அரசு சேவைத் துறைக்கான தலைவராக தலைமைச் செயலாளர் தன் கடமைகளைத் தொடர்வார்.

எனினும், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதால் எந்த அமைச்சுகளும் எந்தவித புதிய கொள்கைகள் அல்லது ஒப்பந்தங்களில் கையெழுத்திட முடியாது. 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை பொறுத்த வரையில், முந்தைய அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கடப்பாடு எதுவும் புதிய அரசாங்கத்திற்கு இல்லை என்பதால் இது மீண்டும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஏற்கெனவே அமைச்சர்களால் அங்கீகரிக்கப்பட்டு, கையெழுத்திடப்பட்ட வணிகர்களுக்கான மானியங்கள், பள்ளி மாணவர்களுக்கான உதவிகள் அனைத்தும் தடைப்படாது மேற்கொள்ளப்படலாம்.    

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img