ஞாயிறு 04, டிசம்பர் 2022  
img
img

தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்
வியாழன் 15 செப்டம்பர் 2022 16:26:19

img

சென்னை, செப்.15

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் ஜூன், ஜூலை மாதங்களில் 4ஆவது அலை தீவிரமடையும் என சொல்லப்பட்டது. ஆனால் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. தற்போது பரவும் கொரோனா கடந்த 2ஆவது அலையை போல் தீவிரமாக இல்லை. பாசிட்டிவிட்டி ரேட்டும் 10க்கும் கீழே குறைவாகவே உள்ளது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் தமிழக அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது.

இதனால் மக்கள் மகிழ்ச்சியாக 2019 ஆம் ஆண்டுக்கு முன்பு எப்படி இருந்தார்களோ அது போல் தற்போதும் இருக்கிறார்கள். இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது ஆங்காங்கே மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. ஒரு வாரம் வரை காய்ச்சல், சளி, இருமல் ஆகியவை இருக்கின்றன. குழந்தைகள், பெரியவர்கள் என பலருக்கு சளி இருமல் காய்ச்சல் பரவி வருகிறது. இந்த நிலையில் சென்னையில் உள்ள எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அதிகளவில் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதால் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் படுக்கைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.  

இந்த மருத்துவமனையில் காய்ச்சல் வார்டில் மொத்தம் 300 படுக்கைகள் உள்ளன. இவை நிரம்பிக் கொண்டே வருவதை போல் கோவை, மதுரை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது. மேற்கண்ட மாவட்டங்களிலும் அரசு மருத்துவமனைகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

மழை, வெயில் என மாறுபட்ட பருவநிலை காரணமாக குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக இந்த வைரஸ் காய்ச்சல் தொற்று குறைந்து காணப்பட்ட நிலையில் தற்போது அதிகளவில் பரவி வருகிறது. எனவே குழந்தைகளுக்கு தடுப்பூசியை தவறாமல் செலுத்த வேண்டும் என தொற்று நோய் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
img
கேரளாவில் புது காச்சல்

கோழிக்கோடு, ஏப். 30- கோழிக்கோடு மாவட்டத்தில் பாக்டீரியாவால் மீண்டும் 2

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img