வியாழன் 12, டிசம்பர் 2024  
img
img

பி.டி.பி.டி.என். ஏற்பாட்டில் மலேசிய குடும்ப சுதந்திர தினக் கொண்டாட்டம்
செவ்வாய் 30 ஆகஸ்ட் 2022 12:33:22

img

கோலாலம்பூர், ஆக.30-

நாளை 31.8.2022ஆம் தேதி மலேசியா தனது 65ஆவது சுதந்திரத் தினத்தைக் கொண்டாடவுள்ளது. ஒவ்வொரு மலேசியரிடமும் நாட்டை நேசிப்பது உட்பட தேசப் பற்றும் ஊன்றியிருக்க வேண்டும். நாட்டு மக்களிடையே நாட்டுப் பற்றையும் விசுவாசத்தையும் ஏற்படுத்துவதற்கு பி.டி.பி.டி.என். எனப்படும் தேசிய உயர்கல்வி கடனுதவிக் கழகம் மலேசிய குடும்ப சுதந்திர தினக் கொண்டாட்டத்தை  ஏற்பாடு செய்துள்ளது.

ஒரு சமூக மேம்பாட்டு நிகழ்ச்சியாக மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தில் இவ்வாண்டு ஆகஸ்ட் முதல் செப்டம்பர் மாதம் வரை நாடு முழுவதுமுள்ள பி.டி.பி.டி.என்.னின் பணிக்குழுவினர் கலந்து கொள்வர். இத்திட்டத்தின் வழி பி.டி.பி.டி.என். எனப்படும் தேசிய உயர்கல்வி கடனுதவிக் கழகம் வசதி குறைந்த மக்களுக்கு அன்றாட அத்தியாவசியப் பொருட்கள் உள்ளடங்கிய உணவுக் கூடைகள் வழங்கப்பட்டன.

தீபகற்ப மலேசியாவிலுள்ள 12 மாநிலங்களிலுள்ள 760 வசதியற்ற குடும்பங்களுக்கு உதவி செய்வதற்காக பி.டி.பி.டி.என். எனப்படும் தேசிய உயர்கல்வி கடனுதவிக் கழகம் இதற்காக 60,800 வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது. முதல் கட்டமாக திரெங்கானு மாநிலத்திலுள்ள 100 வசதியற்ற குடும்பங்களுக்கு இந்த உதவி வழங்கப்பட்டது. கோல நெருஸ் மாவட்ட இளைஞர் மன்றத்தின் ஒத்துழைப்போடு உள்ளூர் தலைவர்களுடன் மோட்டார் சைக்கிள்களில் வீடு வீடாகச் சென்று சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு இந்த உணவுக் கூடைகள் வழங்கப்பட்டன.

மக்களிடையே சுதந்திர சுவாசத்தை ஏற்படுத்தும் வண்ணம் அங்குள்ள மக்களுக்கு தேசியக் கொடிகளும் விநியோகம் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து இதர மாநிலத்திலுள்ள மக்களுக்கும் இந்த உணவுக் கூடைகள் வழங்கப்பட்டன. திரெங்கானுவில் நடைபெற்ற இவ்வாண்டிற்கான பி.டி.பி.டி.என். எனப்படும் தேசிய உயர்கல்வி கடனுதவிக் கழகம் மலேசிய குடும்ப சுதந்திர தினக் கொண்டாட்டத்தை அக்கழகத்தின் தலைவர் அப்லி யூசோப் நிறைவு செய்து வைத்தார். அவருடன் அக்கழகத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரி அகமட் டசுக்கி அப்துல் மஜிட், அக்கழகத்தின் சந்தை - தொடர்புத் துறையின் முதிர்நிலை  தலைமை அதிகாரி வான் ஜவியா வான் அபு பாக்கார், திரெங்கானு மாநில பி.டி.பி.டி.என். தலைமை நிர்வாகி அஜிஸா நாசிக் ஆகியோரும் கலந்து கொண்டனர். 

இதற்கு முன்பு சுந்திர தின குழந்தைகள் திட்டம் நடத்தப்பட்ட வேளையில், இவ்வாண்டு முதல் முதலாக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பி.டி.பி.டி.என். எனப்படும் தேசிய உயர்கல்வி கடனுதவிக் கழகத்தின் தலைவர் அப்லி யூசோப் கூறினார். இவ்வாண்டு மாறுபட்ட அளவில் பி.டி.பி.டி.என். சுதந்திர மாதத்தைக் கொண்டாடும் வகையில் வசதி குறைந்த மக்களுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று உணவுக் கூடைகள் வழங்கப்பட்டதாக அவர் சொன்னார்.

 

இந்த உணவுக் கூடைகள் வழங்கப்பட்டதன் வழி அவர்களின் முகத்தில் புன்னகையைக் காண முடிந்த அதேவேளையில், மலேசிய குடும்பமாக பலமுடன் இணைவோம் எனும் கருப்பொருளோடு கொண்டாடப்படும் இவ்வாண்டின் சுதந்திரத் தினக் கொண்டாட்டம் அங்குள்ள மக்கள் - தலைவர்களுக்கும் பி.டி.பி.டி.என். எனப்படும் தேசிய உயர்கல்வி கடனுதவிக் கழகத்திற்கும் அணுக்கமான உறவை ஏற்படுத்திக் கொடுத்தது என்றும் அவர் தெரிவித்தார்.

 

 

 

 

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img