திங்கள் 09, டிசம்பர் 2024  
img
img

துங்கு ரஸாலி மீது ஒழுங்கு நடவடிக்கையா? பரிசீலிக்கிறது அம்னோ
சனி 30 ஏப்ரல் 2022 12:52:12

img

 

கோலாலம்பூர், ஏப். 30-

 

எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து புதிய கூட்டணியை அமைக்க திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படும் மூத்த தலைவர் துங்கு ரஸாலி ஹம்ஸாவுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்து இப்போது எதையும் கூற இயலாது என்று அம்னோ தலைமைச் செயலாளர் அகமட் மஸ்லான் தெரிவித்தார்.

 

கிளந்தான் மாநில அம்னோ தலைமையகத்திடமிருந்து முழு அறிக்கைக்காக நாங்கள் காத்திருக்கிறோம். அறிக்கை கிடைத்த பிறகுதான் இதுபற்றி முடிவு செய்யப்படும் என்று அவர் கூறினார். நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலின்போது பாஸ் கட்சியின் பிடியிலிருந்து கிளந்தான் மாநிலத்தை மீட்டெடுக்கும் முயற்சிகளில் துங்கு ரஸாலி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

 

கிளந்தான் மாநில அமானா கட்சி தலைவர்களுடன் அவர் அண்மையில் சந்திப்பை நடத்தினார் என்றும் கிளந்தான் மாநிலத்தில் ஒரு புதிய கூட்டணியை அமைப்பது பற்றி அவர்கள் விவாதித்தனர் என்றும் கூறப்படுகிறது. இதன் எதிரொலியாக அங்காத்தான் அமானா மெர்டேகா ராக்யாட் கிளந்தான் என்ற கூட்டணியை அமைத்து அதற்கு தலைமையேற்கவும் துங்கு ரஸாலி முடிவு செய்திருக்கிறார் என்றும் அரசியல் கட்சிகளைத் தவிர்த்து அரசியல் சார்பற்ற அமைப்புகளும் இந்தக் கூட்டணியில் இணைந்து கொள்ளும் என்றும் தெரிகிறது.

 

இந்நிலையில் கிளந்தான் மாநிலத்தில் தனியொரு கூட்டணியை அமைக்கும் துங்கு ரஸாலியின் முடிவு அம்னோவுக்கு எதிரானது என்று கிளந்தான் அம்னோ தலைவர் அகமட் ஜஸ்லான் யாக்கோப் தெரிவித்தார். ரஸாலி ஹம்சா மீண்டும் ஒரு மிகப்பெரிய தவறைச் செய்து கொண்டிருக்கிறார். அவரின் இந்த முயற்சி கட்சி விதிமுறைகளை மீறியது என்றும் யாக்கோப் சாடினார்.

கடந்த 1987ஆம் ஆண்டு நடைபெற்ற அம்னோ தலைவர்களிடையே துன் மகாதீரை எதிர்த்து போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்ட துங்கு ரஸாலி மறு ஆண்டில் அம்னோவிலிருந்து விலகி செமங்காட் 46 என்ற கட்சியை தோற்றுவித்தார். பிறகு 1996ஆம் ஆண்டு அவர் மீண்டும் அம்னோவில் இணைந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img