செவ்வாய் 10, டிசம்பர் 2024  
img
img

இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!
சனி 30 ஏப்ரல் 2022 12:48:26

img

 

கொழும்பு, ஏப். 30-

 

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வருகின்றன. ஆனால் ராஜினாமா செய்ய வலியுறுத்தும், போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்து வரும் அதிபர் கோத்தபாய மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே இருவரும் ஆட்சியில் தொடர்ந்து நீடித்து வருகின்றனர்.

 

இந்த நிலையில், அதிபரை பதவி விலகுமாறு அழுத்தம் கொடுப்பதற்காக, இலங்கை மக்கள் இன்று பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவளித்து, தலைநகர் கொழும்பில் வங்கி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஏனைய தொழிலாளர்கள் இன்று அணிவகுப்புகளை நடத்தியதுடன், அதிபர் அலுவலகத்திற்கு எதிரே நடைபெற்ற பிரதான எதிர்ப்பு போராட்டத்தில் இணைந்து கொண்டனர்.

 

போராட்டம் காரணமாக அங்கு வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன, ஆசிரியர்கள் வரவில்லை மற்றும் பொது போக்குவரத்து தடைபட்டது. மேலும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாகவும், உணவு இடைவெளியில் போராட்டத்தில் பங்கேற்பதாகவும் தெரிவித்தனர்.

மார்ச் 31 முதல் தெருக்களில் குவிந்த போராட்டக்காரர்கள், இலங்கையின் நெருக்கடிக்கு அதிபர் கோத்தபாய ராஜபக்சேவும் அவரது குடும்பத்தினரும் பொறுப்பு என்று கூறி வருகின்றனர்.

 

அதேநேரம் ராஜபக்ச சகோதரர்கள் தலைமையிலான அரசாங்கம், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண உலக வங்கி மற்றும் சர்வதேச நாடுகளிடம் இருந்து கடன்பெறும் முயற்சிகளை முடுக்கி விட்டு உள்ளனர். அத்துடன் தங்களுக்கு எதிரான அரசியல் நெருக்கடி மற்றும் பொதுமக்கள் போராட்டத்துக்கு தீர்வு காணவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இலங்கையில் அனைத்துக்கட்சிகளும் இணைந்த இடைக்கால அரசு அமைக்க அதிபர் கோத்தபாய ராஜபக்சே திட்டமிட்டு உள்ளார். அதேநேரம் நான் பதவி விலக மாட்டேன் எனவும், எந்தவித இடைக்கால அரசும் எனது தலைமையில்தான் அமைய வேண்டும் எனவும் மகிந்த ராஜபக்சே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது

 

ஆனால் எதிர்க்கட்சிகள், ராஜபக்ச சகோதரர்கள் தலைமையிலான அரசாங்கத்தில் அங்கம் வகிக்க மறுத்துவிட்டன. எனினும் இன்று நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்துக்கட்சிகளின் தலைவர்களுக்கு அவர் அழைப்பும் விடுத்து உள்ளார்.

 

 

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img