செவ்வாய் 04, அக்டோபர் 2022  
img
img

9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை
சனி 30 ஏப்ரல் 2022 12:41:24

img

 

பெரம்பலுர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

     கடந்த 2018ம் ஆண்டு, மே.11 தேதியன்று, காஞ்சிபுரம் மாவட்டம், சின்ன காஞ்சிபுரத்தை சேர்ந்த மோகன்,36, என்பவர் தனது மனைவி லெட்சுமி,32, மகள்கள் பவித்ரா,14, நிவேதா,8, மகன் வரதராஜன்,5, மற்றும் உறவினர்கள் முரளி,55, மேகலா,19, நாரயணன்,40, பூபதி,23, ஆகிய 9 பேரும் ஒரு ஷவர்லெட் டவேரா வாடகை காரில் காஞ்சிபுரத்திலிருந்து கொடைக்கானல் நோக்கி சென்றுக் கொண்டிருந்தனர். கார், பெரம்பலு?ர் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நான்கு ரோடு பகுதியில் வந்தபோது, எதிர் திசையில் திருச்சியிலிருந்து கடலுர் மாவட்டம், பெண்ணாடம் நோக்கி சென்ற ஹீண்டா வெர்னா கார்

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி பறந்து சென்று எதிரே சென்ற ஷவர்லெட் டவேரா காரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஷவர் லெட் டவேரா காரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள், மூன்று பெண்கள் உட்பட 9 பேர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து, பெரம்பலுர் போலீசார் வழக்கு பதிந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி பல்கீஸ் தீர்ப்பளித்தார். அதில், குடிபோதையில் காரை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தி 9 பேரை பலியாக்கிய முன்னாள் ராணுவீரர் சக்திசரவணனுக்கு, 18 ஆண்டுகள் சிறை தண்டனை, 47,500 ரூபா அபராதமும் விதித்தும் தீர்பளித்தார் பின்னர், சக்திசரவணனை போலீசார் சிறையில் அடைந்தனர்.

 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
img
கேரளாவில் புது காச்சல்

கோழிக்கோடு, ஏப். 30- கோழிக்கோடு மாவட்டத்தில் பாக்டீரியாவால் மீண்டும் 2

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img