செவ்வாய் 04, அக்டோபர் 2022  
img
img

கேரளாவில் புது காச்சல்
சனி 30 ஏப்ரல் 2022 12:18:15

img

 

கோழிக்கோடு, ஏப். 30- கோழிக்கோடு மாவட்டத்தில் பாக்டீரியாவால் மீண்டும் 2 சிறுமிகளுக்கு புதியவகை ’ஷிகெல்லா’  காச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

      கேரளாவின் கோழிக்கோட்டில் 2020ல் ஒன்றரை வயது குழந்தைக்கு ஷிகெல்லா காச்சல் பாதிப்பு ஏற்பட்டு  சிகிச்சையளிக்கப்பட்டது. தொடர்ந்து 6 பேருக்கு உறுதி செயப்பட்டது. பின்னர் கட்டுப்படுத்தப்பட்டது.இந்தநிலையில்  மீண்டும் ஏப்., 20, 21ல் இரண்டு சிறுமிகளுக்கு ’ஷிகெல்லா’ அறிகுறி கண்டறியப்பட்டது.

அவர்களுக்கு பெரிய அளவில்  உடல்நலக்குறைவு இல்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் முன்னெச்சரிக்கையாக அப்பகுதியில் 100 வீடுகளில் உள்ள கிணறுகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை தொடங்கி உள்ளனர். இக்காச்சலுக்கான அறிகுறி வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, வாந்தி உள்ளவர்களைக் கண்டறியும் பணி நடக்கிறது.

தடுப்பு நடவடிக்கைகளை டாக்டர் கே.வி மிதுன் சசி, தலைமையில் சுகாதாரத் துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். அசுத்தமான உணவு, பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட நீரிலிருந்தோ இத்தொற்று ஏற்படலாம் என தெரிவித்தனர்.

 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
img
கேரளாவில் புது காச்சல்

கோழிக்கோடு, ஏப். 30- கோழிக்கோடு மாவட்டத்தில் பாக்டீரியாவால் மீண்டும் 2

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img