திங்கள் 03, அக்டோபர் 2022  
img
img

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம், ரங்கா ரங்கா கோஷத்துடன் கோலாகலமாக நடைபெற்றது.
சனி 30 ஏப்ரல் 2022 12:01:30

img

திருச்சி, ஏப். 30

     பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் வைணவத் தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், சித்திரை தேர் திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா ஏப்ரல் 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தினமும் காலையும் மாலையும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தார். விழாவின் எட்டாம் திருநாளான நேற்று காலை, நம்பெருமாள் வெள்ளி குதிரை வாகனத்திலும், மாலை தங்கக் குதிரை வாகனத்திலும் புறப்பட்டு, சித்திரை வீதிகளில் வலம் வந்தார். தொடர்ந்து, சித்திரை தேர் அருகே, வையாளி கண்டருளிய நம்பெருமாள், கண்ணாடி அறை சென்றடைந்தார்.

தேரோட்டத்தை முன்னிட்டு காலை 4:45 கண்ணாடி அறையில் இருந்து புறப்பட்ட உற்சவர் நம்பெருமாள் காலை 6 மணிக்கு சித்திரத் தேரில் எழுந்தருளிய நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செயப்பட்டு, காலை 6:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரங்கா, ரங்கா கோஷத்துடன் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.

 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
img
கேரளாவில் புது காச்சல்

கோழிக்கோடு, ஏப். 30- கோழிக்கோடு மாவட்டத்தில் பாக்டீரியாவால் மீண்டும் 2

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img