கோலாலம்பூர், ஜன. 21-
வாகனமோட்டிகளின் பயன்பாட்டிற்காக தற்போது அறிமுகம் செய்யப்பட்டு வரும் வானலை அதிர்வு அடையாள (ஆர்.எஃப்.ஐ.டி.-RFID) வில்லைகளின் உண்மை விலை ஒரு வெள்ளிக்கும் குறைவாக இருக்கும் நிலையில் அதற்கு 35 வெள்ளி கட்டணம் வசூலிப்பது ஏன் என முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டிலுள்ள டோல் சாவடிகளில் விவேக அட்டைகள் இனியும் செயல்படாத நிலையில் அவற்றின் உரிமையாளர்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுமா என்றும் பிளஸ் நிறுவனத்தை அவர் தமது முகநூல் பதிவேற்றத்தில் வினவியிருக்கின்றார்.
இந்த புதிய வில்லைகள் பயன்பாட்டு முறை ஜனவரி 15 தொடக்கம் டோல் சாவடிகளில் அமலுக்கு வந்துள்ளது. எனினும், இதன் பயன்பாடு முறையாக இல்லாததன் காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசலுடன் வாகனமோட்டிகளுக்கு தலைவலியையும் ஏற்படுத்தியது.
அந்த வானலை அதிர்வு அடையாள வில்லைகளை தயாரிப்பதற்கான செலவு ஒரு வெள்ளிக்கும் குறைவாக இருக்கும். பிறகு ஏன் அதை 35 வெள்ளிக்கு விற்க வேண்டும். அதை உங்களால் இலவசமாகக் கொடுக்க முடியாது என்றால் 5 வெள்ளிக்கு விலையைக் குறைக்க வேண்டியதுதானே என்று நஜீப் கருத்துக் கூறியுள்ளார்.
என்னைப் பொறுத்தவரையில் தற்போதைய டச் அண்ட் கோ மற்றும் விவேக அட்டை (ஸ்மார்ட் டேக்) இரண்டுமே நிலைநிறுத்தப்பட வேண்டும். அவைதான் வாகனமோட்டிகளின் சிறந்த தேர்வாக உள்ளன என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
தூக்குத் தண்டனையை ரத்துச்செய்ய வேண்டும் என மலேசியாவில் குரல்
மேலும்டான்ஸ்ரீ அஸாம் பாக்கி மீதான தனது விசாரணையை தொடர்ந்து மலேசிய பங்கு ஆணையம்
மேலும்இணையவழி சந்திப்பு ஏற்பாட்டு முறையை (எஸ்.டி.ஓ.) ரத்து செய்யவிருக்கும்
மேலும்எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து புதிய கூட்டணியை அமைக்க
மேலும்அண்மையில் பி.டி.பி.டி.என். 25ஆம் ஆண்டு அதிர்ஷ்டக் குலுக்கல் Kempen Cabutan Wow 25 Tahun PTPTN என்ற
மேலும்