வியாழன் 05, டிசம்பர் 2024  
img
img

இன்று தொடங்கி ஜன.20 வரை மலேசியா-சிங்கப்பூர் இடையிலான விமான - தரைவழி பயண டிக்கெட் நிறுத்தம்
வியாழன் 23 டிசம்பர் 2021 14:46:51

img

ஜொகூர்பாரு, டிச. 23-

ஒமிக்ரோன் கோவிட்-19 தொற்று அதிகமாவதை அடுத்து அண்மையில் தொடங்கப்பட்ட விமான -தரைவழிப் போக்குவரத்தை மலேசியாவும் சிங்கப்பூரும் நிறுத்த முடிவு செய்திருக்கின்றன. இன்று டிசம்பர் 23 தொடங்கி வரும் ஜனவரி 20 ஆம் தேதி வரை விடிஎல் எனப்படும் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கான சிறப்புப் பாதையில் பயணிக்கும் டிக்கெட் விற்பனை இருதரப்பிலும் நிறுத்தப்படுவதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் அறிவித்தார்.

ஜன.21 இல் மீண்டும் தொடக்கம்

வரும் ஜனவரி 21 ஆம் தேதி மலேசியாவும் சிங்கப்பூரும் சுகாதார நிலைமையை முழுமையாக ஆய்வு செய்து பின்னரே மீண்டும் அது திறக்கப்படும் என்று அவர் அறிவித்தார். எனினும் அந்த நேரத்தில் டிக்கெட் விற்பனையின் அளவு கட்டுப்படுத்தப்படும். இரு நாடுகளையும் சேர்ந்த போக்குவரத்து அமைச்சு அனைத்துலக வாணிப தொழில்துறை அமைச்சு ஆகியவற்றுக்கு இதுபற்றி தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்றார் அவர்.

விடிஎல் விமான வழியும்  தரை வழியும் பயணிக்க டிக்கெட்டுகளை முன் கூட்டியே வாங்கியவர்கள் தங்கள் பயணத்தை தொடர அனுமதிக்கப்படுவர். எனினும் அவர்கள் அனைவரும் கடுமையான சோதனைக்கு உள்ளாக்கப்படுவர். அவர்கள் சுய பரிசோதனை கருவிகளின் மூலம் தங்களை முழுமையாக சோதித்துக்கொண்டு நோய்த் தொற்று இன்றி தாங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார் அவர்.

சிங்கப்பூரில் நோய்த்தொற்று அதிகரிப்பு

சிங்கப்பூரில் மரபணு மாறிய புதிய நச்சுயிரியின் பரவல் அதிகமாகி இருக்கிறது. மூவருக்கு பாதிப்பை ஏற்படுத்திய நோய்த்திரள்கள் கண்டறியப்பட்டிருப்பதாக சிங்கப்பூர் அறிவித்திருந்தது.கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ஜொகூர் -சிங்கை எல்லை மூடப்பட்டு அனைவரும் பரிதவிப்புக்கு உள்ளாகினர்.

இந்நிலையில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கான விடிஎல் சிறப்பு பாதைகள் இருநாட்டு விமான நிலையங்களிலும் இரு நாட்டு தரை வழி எல்லைகளிலும் கடந்த நவம்பர் 21 ஆம் தேதி முதல் திறப்பதற்கு மலேசியா-சிங்கப்பூர் முடிவு செய்தன. இந்நிலையில் நோய் பரவலின் அச்சத்தால் வரும் ஜனவரி 20 ஆம் தேதி வரை இந்த விடிஎல் டிக்கெட்டுகள் நிறுத்தப்படுகின்றன. விமானப் பயணமும் பேருந்து பயணங்களும் நிறுத்தப்படுகின்றன.

 

 

 

  

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img