img
img

100 நாள் Aspirasi #KeluargaMalaysia திரளாகக் கலந்து கொள்ள வாருங்கள்
திங்கள் 06 டிசம்பர் 2021 12:58:39

img

கோலாலம்பூர், டிச. 5-

அரசாங்கத்தின் 100 நாள் Aspirasi #KeluargaMalaysia எனும் நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமான வகையில் இம்மாதம் 9 ஆம் தேதி தொடங்கி 12 ஆம் தேதி வரையில் கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் காலை 9.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணி வரையில் நடைபெறவுள்ளது. இந்த நான்கு நாட்களிலும் மலேசியக் குடும்பமாக மலேசியர்கள் அனைவரும் திரளாகக் கலந்து கொள்வதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் வரையப்பட்டுள்ளன.

கலாச்சார நிகழ்ச்சிகள், கலையுலகம், கண்காட்சி, தொழில் முனைவர் விற்பனை தளம், அமைச்சின் சாதனைகளைக் காட்டும் கலை காட்சிக்கூடம், உதவித் திட்டங்கள், வணிகப் பொருத்தம், அமைச்சு மற்றும் அரசாங்கம் சார்ந்த நிறுவனங்களின் கண்காட்சி, ஐம் யூத் எனும் இளையோருக்கான நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை நீங்கள் கண்டு களிக்கலாம்.

முதல் நாள் டிசம்பர் 9 ஆம் தேதி, காலை முதல் இரவு வரை அதிர்ஷ்ட குலுக்கல், கெரொன்சோங், மணிகளின் அற்புதங்கள், சொங்கா, பத்து சிரம்பான் போன்ற விளையாட்டுகள், ஏற்றுமதி சாம்பியன்ஷிப், வேலை வாய்ப்பு விழா, கெலுவார்கா மலேசியா, டிக்கிர் பாராட், மைகாசே கேப்பிட்டல்,பாத்தேக் வர்ணமிடுதல், சின்னங்களின் அறிமுகம், கதிர் சொற்பொழிவு  என பல்வேறு நிகழ்ச்சிகளை பொதுமக்கள் கண்டுகளிக்கலாம். இதனை ஏற்பாடு செய்துள்ள பிரதமர் துறை பொதுமக்களை திரளாகக் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளது.

கெலுவார்கா மலேசியா அல்லது மலேசிய குடும்பம் என்ற இந்த சுலோகத்தை 2021 ஆகஸ்ட் 22 ஆம் தேதி பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

மக்கள் தங்களுக்குள்ள வேறுபாடுகளை மறந்து கோவிட்-19 தொற்றுப் பரவலை எதிர்கொள்வதில் சவால்களை ஏற்று, நாடு மீட்சிப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை இது வலியுறுத்துகின்றது.

அனைத்து அமைச்சுகளின் 100 நாள் சாதனைகளும் இந்த 4 நாள் நிகழ்ச்சியில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 

 

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
வெ.1 மதிப்புள்ள RFID வில்லைகளை வெ.35 க்கு விற்பது ஏன்? நஜீப் கேள்வி

வாகனமோட்டிகளின் பயன்பாட்டிற்காக தற்போது அறிமுகம் செய்யப்பட்டு வரும்

மேலும்
img
மாணவர்களிடையே பரவுகிறது கோவிட்-19 மேலும் 3 பள்ளிகள் மூடல்

கோவிட்-19 தொற்றுப் பரவல் அண்மைய வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் நாடு

மேலும்
img
எம்.ஏ.சி.சி தலைவரின் விவகாரத்தை மூடி மறைக்க வேண்டாம் பிரதமருக்கு கோபிந்த் அறிவுறுத்தல்

டான்ஸ்ரீ அஸாம் பாக்கி மீதான தனது விசாரணையை தொடர்ந்து மலேசிய பங்கு ஆணையம்

மேலும்
img
வெறும் வெள்ளைச் சோறும் கறியும் போதுமா விசாரிக்கிறது கல்வியமைச்சு

பள்ளியின் கூடுதல் உணவு திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் என்று சமூக

மேலும்
img
ஒருவருக்கு ஒருவர் உதவுவதில் மக்கள்தான் அக்கறை காட்டினர்

அமைச்சர்களுக்கு எல்லாம் ஆயிரக்கணக்கில் சம்பளம் கொடுக்கிறோம். ஆனால் ஒரு

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img