திங்கள் 09, டிசம்பர் 2024  
img
img

மலேசியக் குடும்ப உன்னத கோட்பாடு அமைச்சர்களின் 100 நாள் அடைவு நிலை உயர்கல்வியமைச்சர் தரும் விளக்கம்
செவ்வாய் 09 நவம்பர் 2021 15:31:25

img

கோலாலம்பூர், நவ. 9-

1. கே : 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதியன்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தமது புதிய அமைச்சரவை பட்டியலை அறிவித்தார். 100 நாட்களுக்குள் தங்களின் அடைவு நிலையினை நிரூபிக்க வேண்டும் என்பதுதான் வேண்டுகோள்.  அமைச்சர்களின் 100 நாள் அடைவு நிலை தொடர்பிலான முன்முயற்சி திட்டமானது மலேசியக் குடும்ப உன்னத  திட்டம் என்று அழைக்கப்படுகிறது. உயர்கல்வி நோக்கங்களை நிறைவேற்றவும் பொதுவாக மக்கள் குறிப்பாக மாணவர்களின் தேவைகளை நிறைவு செய்யும் வண்ணம் உங்களின் முதன்மையான கவனம் என்ன?

பதில் : குறிப்பாக உயர்கல்வி அமைச்சு சம்பந்தமான மலேசியக் குடும்ப உன்னத நோக்கங்களை இங்கே பகிர்ந்து கொள்ள நான் விரும்புகிறேன். 100 நாள் அடைவு நிலை தொடர்பில் நிறைவேற்ற வேண்டிய நான்கு நடவடிக்கைகளை உயர்கல்வி அமைச்சு பட்டியலிட்டுள்ளது.

(i) மலேசியக் குடும்ப பல்கலைக்கழக வளாக உணவுத் திட்டத்தின் கீழ் இலவச உணவு பற்றுச்சீட்டு வழங்குதல்

(ii) பல்கலைக்கழக உயர்கல்வியாளர்களுக்கு தடுப்பூசி வழங்குதல்

(iii) உயர்கல்வி நிலைய மாணவர்களுக்கு துரித பரிசோதனை கருவிகள் வழங்குதல்

(iv) Program GETHIRED@KPT மூலம் உயர்கல்வி நிலைய மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளையும் வருமானத்தை ஈட்டவும் வழியேற்படுத்தித் தருதல்.

மக்களின் மகிழ்வான வாழ்க்கையினை உயர்த்தும் வகையில் உயர்கல்வி அமைச்சு Menyemarakkan Semangat#KPTPrihatin என்ற வியூகத்தை பயன்படுத்தி வருகிறது. நடப்பு நிலைமையின் தேவைகளை உணர்ந்து கொள்ளுதல், பொறுப்பாகவும் நம்பமாகவும் நடந்து கொள்ளுதல் மற்றும் மக்களின் நம்பிக்கையை மீட்டெடுத்தல் போன்ற மூன்று மலேசியக் குடும்ப உன்னத கோட்பாடுகளுக்கு இத்தகைய அணுகுமுறை முக்கியத்துவம் வழங்குகிறது.

2. கே : 100 நாள் அடைவு நிலையினை சாதிப்பதற்கு உயர்கல்வி அமைச்சு கடைப்பிடிக்கும் வழிமுறைதான் என்ன?

பதில் : மூன்று அம்சங்களை அடிப்படையாக வைத்து AKM நான்கு உன்னத கோட்பாடு நடவடிக்கைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. நடப்பு அரசாங்க கொள்கைகளுக்கு ஏற்ப மறுவடிவம் காண்பது என்பது நேர்முகமாகவோ மறைமுகமாகவோ வவாசான் 2030, 12ஆவது மலேசியத் திட்டம், 2015-2025 மலேசியக் கல்வி மேம்பாட்டுத் திட்டத்திற்கு இது இறுதியில் நன்மை பயக்கும். இவை எல்லாம் தேசிய மீட்சித் திட்டத்தை வெற்றி பெற வைக்கும். நிதி வளத்தை கருத்தில் கொண்டு உயர்கல்வி அமைச்சு காரியமாற்றுகிறது. சிக்கன அடிப்படையில் இருக்கிற ஒதுக்கீட்டை பயன்படுத்துகிறது. அரசாங்கத்தின் கூடுதல் ஒதுக்கீடு தேவையில்லை.

3. கே : மலேசியக் குடும்ப உன்னத நோக்கங்களின் நன்மைகள் உயர்கல்வி நிலையங்களின் பட்டதாரிகள் மற்றும் மாணவர்களை சென்று சேர வேண்டிய இலக்கினை அமைச்சு கொண்டுள்ளது. ஒவ்வொரு AKM நடவடிக்கை குறித்து சுருக்கமாக விவரிப்பீர்களா?

பதில் : (i) முதலாவது இலவச உணவு பற்றுச்சீட்டு வழங்குவது. பி40 பிரிவு மாணவர்களை இலக்காக கொண்டு இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. மாணவர்கள் மற்றும் குடும்பங்களின் வாழ்க்கை செலவினச் சுமையினை இது குறைக்கிறது. 443,760 உணவு பற்றுச்சீட்டுகள் தயாராகியுள்ளன. இதற்கான ஒதுக்கீடு 6.6 மில்லியன் வெள்ளி. ஏறத்தாழ 88,752 மாணவர்கள் இதனால் பயனடைவர் என்று மதிப்பிடப்படுகிறது. 5 பல்கலைக்கழகங்களில் டிஜிட்டல் பற்றுச்சீட்டு முறை பயன்படுத்தப்படும். 15 பல்கலைக்கழகங்களில் ரொக்கப் பண பற்றுச்சீட்டு முறை பயன்படுத்தப்படும்.

          (ii) தடுப்பூசி வழங்குதல்

பல்கலைக்கழக வளாகத் திட்டத்தின் மூலம்  தடுப்பூசி போடுதல் இரண்டாவது AKM திட்டமாகும். பல்கலைக்கழகங்கள் படிப்படியாக திறக்கப்படுகின்றன. உயர்கல்வி நிலையங்களில் உள்ள அனைவரும் 100 விழுக்காடு தடுப்பூசி பெற வேண்டும் என்பது எங்களின் இலக்கு.

         (iii) மாணவர்களுக்கு துரித பரிசோதனைக் கருவிகள் விநியோகம்

பரிசோதனைக் கருவிகள் வழங்குவது என்பது AKM மூன்றாவது திட்டமாகும். கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிராக மாணவர்களை இது பாதுகாக்கிறது.

        (iv) மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள்

Program GETHIRED@KPT என்ற திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு என்பது AKM நான்காவது திட்டமாகும். குறைந்தபட்சம் 13,000 மாணவர்கள் பயன்பெறுவர் என்று மதிப்பிடப்படுகிறது.

4. கே : இதுநாள் வரையில் உயர்கல்வியின் அடைவுநிலையை பற்றி விவரிக்க இயலுமா?

பதில் : இதுவரையில் 133,128 உணவு பற்றுச்சீட்டுகளை விநியோகம் செய்துள்ளோம். மேலும் 310,632 பற்றுச்சீட்டுகள் பிறகு விநியோகம் செய்யப்படும். 1.15 மில்லியன் மாணவர்களில் 959,917 பேர் தடுப்பூசி பெற்றுள்ளனர். 1,161,969 பரிசோதனைக் கருவிகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

5. கே : அமைச்சு சவால்களை சமாளிப்பது எவ்வாறு?

பதில் : எதிலுமே சவால்களை எதிர்நோக்குவது தவிர்க்க இயலாத ஒன்று. சவால்களை வெற்றிகரமாக சமாளித்து வருகிறோம். கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் சிறப்புக் குழுவும் மலேசிய சுகாதார அமைச்சும் ஒப்பற்ற ஒத்துழைப்பினை வழங்குவது அற்புதம்.

6. கே : உங்களின் எதிர்பார்ப்பு என்ன

பதில் : நாங்கள் மேற்கொள்ளும் பல்வேறு திட்டங்களாலும் வழங்கப்படும் உதவிகளாலும் மக்கள் நிச்சயம் நன்மை பெறுவர். அனைத்து தரப்பும் நேர்முகமாக அல்லது மறைமுகமாக நன்மை பெறுவர் என்பது எனது எதிர்பார்ப்பு.  

 

 

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img