திங்கள் 06, டிசம்பர் 2021  
img
img

உலக தரத்திற்கு ஏற்ப உயர் கல்வி முறையில் புதிய கட்டமைப்பு அறிமுகம்
சனி 16 அக்டோபர் 2021 12:44:46

img

கோலாலம்பூர், அக். 16-

நாட்டில் உயர்கல்வி முறையை புதிய பரிணாமத்திற்கு இட்டுச்சென்று, உலகத் தரம் வாய்ந்த திறமைகளை உருவாக்கும் வகையில் ஒரு புதிய கட்டமைப்பை உயர் கல்வி அமைச்சு நேற்று அறிமுகம் செய்தது. எக்சல் எனும் அனுபவக் கற்றல் மற்றும் திறன் அடிப்படையிலான கல்வி கட்டமைப்பை உயர்கல்வி அமைச்சுடன் மலேசிய தகுதி நிறுவனம், டெலன்கார்ப், மலேசிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (மைடா), சொக்சோ மற்றும் அரசாங்க பல்கலைக்கழகங்கள் இணைந்து உருவாக்கியுள்ளன.

தற்போது நாட்டில் கற்றல், கற்பித்தல் இரண்டும் அதிகமாக வளைந்துகொடுக்கும் தன்மையைக் கொண்டுள்ளன என்று இந்த அறிமுக நிகழ்ச்சியில் உரை நிகழ்த்திய உயர் கல்வி அமைச்சர் நொராய்னி அஹ்மட் கூறினார்.

புதிய வழக்க நிலையில் கல்வி

புதிய வழக்க நிலையில் கற்றல் கற்பித்தலை நோக்கி இப்புதிய கட்டமைப்பு (எக்சல்) பயணிக்கின்றது. மேலும், தொழில்நுட்பம் மற்றும் கற்றலின் இயக்கம் அடிப்படையிலானது என்று அவர் தெரிவித்தார். நாட்டின் உயர்கல்வி முறை உலகளாவிய நிலையில் அனுபவிக்கப்படும் துரித மாற்றங்களுக்கு ஏற்ப இருப்பதை உறுதி செய்வதற்கு இது மிகவும் முக்கியமாகும். தொழில்துறைகளின் மாற்றங்களை பட்டதாரிகள் எதிர்நோக்க வேண்டும் என அமைச்சர் மேலும் மேலும் கூறினார்.

கல்வியின் தரத்தை மேம்படுத்தும் அதே சமயம், மாணவர்களின் ஆற்றலை மேம்படுத்தி இடைவெளியைக் குறைப்பதற்காக எக்சல் உருவாக்கப்பட்டது. நான்கு அம்சங்களின் அடிப்படையிலிருந்து அனுபவக் கற்றல் மற்றும் திறன் கல்வியில் இக்கட்டமைப்பு கவனம் செலுத்தும். இவை: தொழில்துறை ரீதியிலான அனுபவக் கல்வி (IDEAL), சமூகத் திறன் அனுபவக் கற்றல் (CARE), ஆய்வு அடிப்படையிலான அனுபவக் கல்வி (REAL), மற்றும் தனிபயனாக்கப்பட்ட அனுபவக் கல்வி (POISE) ஆகியனவாகும்.

தொழில் ரீதியான கல்வி

தொழில் ரீதியிலான அனுபவக் கல்வி வாயிலாக தொழில்துறை தரத்திற்கு ஏற்ற பட்டதாரிகள் உருவாக்கப்படுவர். கல்வி நோக்கங்களை அடைவதற்காக அவர்கள் திறன்மிக்க மாணவர்களாக உருவாக்கம் காண்பார்கள். இரண்டாவது அம்சத்தின் கீழ், சமூகத்துடன் அணுக்கமான உறவுகளைக் கொண்டிருப்பதன் வழி ஆழமான அனுபவங்களைப் பெறுவதில் கவனம் செலுத்தப்படும். ஒரு சமூகத்திற்குள் தங்களின் பங்குகளை பற்றிய அறிவாற்றலையும் புரிந்துணர்வையும் அதிகரிக்க இது மாணவர்களுக்கு உதவும்.

மாணவர்களின் ஆய்வும் ஆர்வமும்

ஆய்வு அடிப்படையிலான அனுபவக் கல்வியானது புதிய தேடலை நோக்கி மாணவர்களை இட்டுச் செல்லும். ஆய்வு, ஆர்வம் என்பதன் அடிப்படையில் மாணவர்கள் கற்றலைத் தொடங்குவார்கள். மாணவர்களுக்கான கட்டமைக்கப்பட்ட பாடத்திட்டத்தை நான்காவது அம்சம் வலியுறுத்துகிறது. கற்றலில் ஆயுட்கால வாய்ப்பினை மாணவர்களுக்கு இது வழங்குகிறது. தங்கள் லட்சியத்தை நோக்கி அவர்கள் பயணிக்கலாம் என்று நொராய்னி விவரித்தார்.

மலேசிய கல்வி மேம்பாட்டுத் திட்டம் (உயர் கல்வி) 2015-2025 ஆனது அறநெறி கொண்ட அறிவியல் என்பதன் அடிப்படையில் சமநிலை முயற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றது என்பதை நாம் அறிவோம். இத்திட்டத்தில் மாணவர்களுக்காக ஆறு அம்சங்கள் வரையப்பட்டுள்ளன.

மாணவர்களுக்கான 6 அம்சங்கள்

அவை: நெறிமுறைகள் மற்றும் நல்லிணக்கம்; தலைமைத்துவ ஆற்றல்; தேசிய அடையாளம்; மொழி ஆற்றல்; சிந்தனை ஆற்றல் மற்றும் அறிவாற்றல் ஆகியனவாகும்.  நாடு, இந்த சமூகம் மற்றும் தம்மைச் சார்ந்தவர்களுக்கு தங்கள் பங்களிப்பை ஆற்றக்கூடிய மாணவர்களை உருவாக்குவதே இதன் இலக்காகும். ஆனால் உண்மை என்னவென்றால், நடப்பு கல்வி முறையைப் பற்றித்தான் நாம் அடிக்கடி கருத்துகளைக் கேட்டு வருகிறோம். சந்தையின் தேவைகளுக்கு ஏற்ப சம்பந்தம் இல்லாத அதிகமான பாடத்திட்டங்கள் இருப்பதாகச் சொல்லப்படுவதை கேட்கிறோம்.

தேவைகளுக்கு ஏற்ப மாணவர்களுக்கு கல்வி போதிக்கப்படுவதில்லை எனவும் ஒரு சாரார் கூறுகின்றனர். பட்டதாரிகளாக உருவாகும் மாணவர்களுக்கு தொழில்துறைகளின் தேவைகள், திறமைகளுக்கு ஈடானவர்களாக இருப்பதில்லை என்று சொல்லப்படுகிறது.

தொழில்துறைகளுக்கு ஏற்ற தேவைகள்

இக்கூற்றுகளின் அடிப்படையில் நிலைமையை ஆராய்ந்து, தற்போதைய தொழில்துறைகளுக்கு ஏற்ற தேவைகளைக் கொண்ட மாணவர்களை உருவாக்குவதற்கு உயர் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதன் உருவாக்கம்தான் எக்சல் என்பதை நொராய்னி விவரித்தார்.

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
100 நாள் Aspirasi #KeluargaMalaysia திரளாகக் கலந்து கொள்ள வாருங்கள்

அரசாங்கத்தின் 100 நாள் Aspirasi #KeluargaMalaysia எனும் நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமான

மேலும்
img
Aspirasi #KeluargaMalaysia கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்

அரசாங்கத்தின் 100 நாள் Aspirasi #Keluarga Malaysia எனும் நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமான

மேலும்
img
தொழில் முனைவோர், தொழில் துறை வளர்ச்சிக்கான அத்தியாவசிய திறன்களுடன் மலேசிய இந்தியர்களுக்கு சித்தப்படுத்தும் NCER பயிற்சித் திட்டங்கள்.

மலேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் வலியுறுத்தி வரும்

மேலும்
img
பி.டி.பி.டி.என். வழங்கும் 15%, 12%, 10% - சலுகைக்கான விவரங்கள்

தேசிய உயர்கல்வி நிதியுதவிக் கழகமான பி.டி.பி.டி.என்., தங்கள் கடனை திரும்பச்

மேலும்
img
KEMPEN BELI BARANGAN MALAYSIA

வாருங்கள் ஆதரிப்போம், மற்றும் வாங்குவோம்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img