திங்கள் 06, டிசம்பர் 2021  
img
img

சேமிப்பு மாதத்தை முன்னிட்டு பி.டி.பி.டி.என்.வழங்கும் சேமிப்புத் திட்டம் BMS 2021
ஞாயிறு 03 அக்டோபர் 2021 14:47:37

img

 சேமிப்பு மாதத்தை முன்னிட்டு பி.டி.பி.டி.என்.வழங்கும் சேமிப்புத் திட்டம் BMS 2021

 கோலாலம்பூர், அக். 3-

ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 31 ஆம் தேதி அனுசரிக்கப்படும் உலக சேமிப்பு தினத்தை முன்னிட்டு மிகவும் சிறப்புத்தன்மை வாய்ந்த பி.எம்.எஸ். அல்லது எஸ்.எஸ்.பி.என். முதலீடு சேமிப்புத் திட்டத்தை பி.டி.பி.டி.என் அறிமுகம் செய்துள்ளது. கேலக்ஸி அல்லது விண்மீன் என்ற புதிய கருப்பொருளுடன் பி.எம்.எஸ். 2021 அறிமுகமாகியுள்ளது. உங்கள் பிள்ளைகளின் சூப்பர் ஹீரோவாகுவோம் என்ற கருப்பொருளும் நிலைநாட்டப்படுகிறது. தங்கள் பிள்ளைகளின் எதிர்கால கல்வி சேமிப்பாக இத்திட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பை இது வழங்குகிறது.

பி.டி.பி.டி.என். அதிகாரத்துவ முகநூல் அகப்பக்கத்தில் நேற்று காலை இத்திட்டத்தின் அறிமுக விழா நடைபெற்றது. பி.டி.பி.டி.என். தலைவர் டத்தோ வான் சைபுல் வான் ஜான் இதனை தொடக்கி வைத்த வேளையில் பி.டி.பி.டி.என். தலைமை செயல்முறை அதிகாரி அஹ்மட் டாசுக்கி அப்துல் மாஜிட் இதில் கலந்து கொண்டார். 2021 அக்டோபர் முதல் தேதியிலிருந்து அக்டோபர் 31 ஆம் தேதி வரையில் ஒரு மாதம் முழுவதும் இந்த பி.எம்.எஸ். 2021 திட்டம் மேற்கொள்ளப்படும். பெற்றோர்களும் பிள்ளைகளும் பங்கேற்கும் வகையில் பல்வேறு புதிய போட்டி நிகழ்ச்சிகளும் திட்டங்களும் இந்த ஒரு மாதத்தில் மேற்கொள்ளப்படும் என டத்தோ வான் சைபுல் தமது உரையின்போது தெரிவித்தார்.

Bonding Chef Junior, Sembang Santai BMS 2021, Forum Cakna Kewangan, Siri P&T, Detik Indah Bersama SiManja, My Parents, My real superheroes  ஆகியன அதன் பல்வேறு திட்டங்களில் அடங்கும். இவை போக, போட்டி அங்கங்களில் Fotografi Simpan SSPN, Chef Junior Simpan SSPN, Simpan SSPN Go talent, Snap & Win Simpan SSPN, Happy Hour, Quizizz, மற்றும் எஸ்.எஸ்.பி.என். சேமிப்பு வர்ணம் தீட்டும் போட்டி ஆகியன உங்களுக்காக காத்திருக்கின்றன.

பி.எம்.எஸ். 2021 க்கு மேலும் மெருகூட்டும் வகையில் பரிவுமிக்க பி.டி.பி.டி.என். எனும் சிறப்புத் திட்டத்தையும் பி.டி.பி.டி.என். வரைந்துள்ளது. எஸ்.எஸ்.பி.என். 2021 உலா என்று அதற்கு பெயரிடப்பட்டுள்ளது. எங்கள் நிறுவனத்தின் சமூகக்கடப்பாடுகளில் ஒன்றாக மாநில ஜக்காட் மையம் மற்றும் அரசு சார்ந்த நிறுவனத்தின் ஒத்துழைப்பின் வாயிலாக மொத்தம் 500,000 வெள்ளி மதிப்புள்ள ஜக்காட் தொகை வழங்கப்படும். 5,000 க்கும் மேற்பட்ட வறிய நிலையில் உள்ளவர்கள் இதன் வாயிலாக நன்மை அடைவார்கள். எஸ்.எஸ்.பி.என். பிரைம் சேமிப்புக் கணக்கு ரூபத்தில் அவர்கள் இந்த உதவித் தொகையைப் பெறுவார்கள். ஏழ்மை நிலையில் உள்ளவர்களும் இந்த சேமிப்பின் நன்மைகளை அடைவதை இது உறுதி செய்யும்.

இது மட்டுமின்றி, புதிய முதலீட்டாளர்களை கவரும் ஒரு நடவடிக்கையாக ஏழு (7) அம்சங்களைக் கொண்ட கனவு சேமிப்பு நிதியையும் பி.டி.பி.டி.என். அறிமுகம் செய்கிறது. விண்வெளி வீரர், தீயணைப்பு, பொறியாளர், மருத்துவர், ராணுவம், நீதிபதி, விமானி ஆகியன அந்த 7 அம்சங்களாகும். முதலீட்டை அதிகரிப்பதும், கையிருப்பில் உள்ள முதலீட்டை தொடர்ந்து நிலைநாட்டுவதும் இதன் நோக்கமாகும். விண்வெளி வீரர் என்ற கதாபாத்திரத்திற்கான சேமிப்பு இந்த அக்டோபர் மாதம் தொடங்குகின்றது. மற்றவை ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட சேமிப்பின் அளவோடு அறிமுகம் செய்யப்படும்.

எஸ்.எஸ்.பி.என். சேமிப்பு பொதுமக்களின் முதன்மை தேர்வாக இருக்க வேண்டும் என்பதற்காக 2018 ஆம் ஆண்டு தொடங்கி பி.டி.பி.டி.என். திட்டமிட்டு, அமல்படுத்தி வரும் ஒரு திட்டமாக பி.எம்.எஸ். 2021 விளங்குகிறது என வான் சைபுல் கூறினார். இதில் முதலீடு செய்யும் அதே சமயம் அதன் நன்மைகளை மக்கள் அனுபவிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் உள்ள மக்கள் மத்தியில் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துவதே உலக சேமிப்பு தினத்தின் நோக்கமாகும். இந்த உலகமும், நமது நாடும் கோவிட்-19 தொற்றுப் பரவலில் இன்னும்  சிக்கியிருந்தாலும் முதலீடு அல்லது சேமிக்கும் உணர்வுக்கு இது எந்த வகையிலும் இடையூறாக இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

இந்த இக்கட்டான சூழலில் நாம் அனைவரும் புதிய வழக்க நிலையின் கீழ் டிஜிட்டல் முறை நமக்கு வழங்கும் வசதிகளை நாம் பயன்படுத்திக் கொண்டு பல்வேறு சேமிப்புச் சலுகைகளைப் பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும். எனவே, நேரடியாக பி.டி.பி.டி.என். அலுவலகத்திற்கு வராமலேயே இணையம் வாயிலாக பொதுமக்கள் முதலீடு செய்யலாம் அல்லது நடப்பு முதலீடுகளை அதிகரிக்கவும் முடியும். எஸ்.எஸ்.பி.என். சேமிப்பில் சிம்பானான் எஸ்.எஸ்.பி.என். பிரைம் மற்றும் சிம்பானான் எஸ்.எஸ்.பி.என். பிளஸ் ஆகியன அடங்கும். மலேசிய சமூகத்தினருக்கு இது பல்வேறு பயன்களை அளிக்கின்றது. எஸ்.எஸ்.பி.என். பிரைம் திட்டத்தை பொறுத்த வரையில் மாதா மாதம் குறிப்பிட்ட தொகை என்ற அர்ப்பணிப்பு கிடையாது. எனினும் இது 8,000 வெள்ளி வரையில் வரி விலக்கு சலுகையை வழங்குகிறது. இலவச தக்காஃபுல், லாப ஈவு, போன்ற சலுகைகளும் உள்ளன.

எஸ்.எஸ்.பி.என். பிளஸ் உங்களுக்கு கவர்ச்சிகரமான 6 வகையான அம்சங்களை வழங்குகிறது. மொத்தம் 12 லட்சம் வெள்ளி வரைக்குமான தக்காஃபுல் சலுகைகள், முதலீட்டாளரின் 69 வயது வரைக்குமான பாதுகாப்பு ஆகியன அவற்றுள் உள்ளடங்கும். அத்துடன் Cabutan WOW! உங்களுக்கு மிகச்சிறந்த பரிசுகளை வழங்கக் காத்திருக்கிறது. சிம்பானான் எஸ்.எஸ்.பி.என். பிளஸ் 2021 மொத்தம் 150,000 வெள்ளி மதிப்புள்ள தங்கக்கட்டிகளை வெல்லும் வாய்ப்பை வழங்குகிறது. மற்ற சுமார் 320,000 வெள்ளி மதிப்பிலான பரிசுகளும் அடங்கும்.

இந்த ஆண்டு மொத்தம் 180 கோடி வெள்ளி முதலீடு பி.டி.பி.டி.என். நிறுவனத்தின் இலக்காகும். புதிதாக சுமார் 400,000 சேமிப்புக் கணக்குகளை இது உள்ளடக்கும். 2021 ஆகஸ்ட் மாத கணக்குப்படி 253,818 புதிய சேமிப்புக் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன. இதன் மொத்தத் தொகை 157 கோடி வெள்ளியாகும். கடந்த 2004 தொடங்கி 2021 ஆகஸ்ட் 31 வரையில் மொத்தம் 51 லட்சம் சிம்பானான் எஸ்.எஸ்.பி.என். கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன. இதன் மொத்த முதலீட்டுத் தொகை 945 கோடி வெள்ளியாகும்.

 

 

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
100 நாள் Aspirasi #KeluargaMalaysia திரளாகக் கலந்து கொள்ள வாருங்கள்

அரசாங்கத்தின் 100 நாள் Aspirasi #KeluargaMalaysia எனும் நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமான

மேலும்
img
Aspirasi #KeluargaMalaysia கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்

அரசாங்கத்தின் 100 நாள் Aspirasi #Keluarga Malaysia எனும் நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமான

மேலும்
img
தொழில் முனைவோர், தொழில் துறை வளர்ச்சிக்கான அத்தியாவசிய திறன்களுடன் மலேசிய இந்தியர்களுக்கு சித்தப்படுத்தும் NCER பயிற்சித் திட்டங்கள்.

மலேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் வலியுறுத்தி வரும்

மேலும்
img
பி.டி.பி.டி.என். வழங்கும் 15%, 12%, 10% - சலுகைக்கான விவரங்கள்

தேசிய உயர்கல்வி நிதியுதவிக் கழகமான பி.டி.பி.டி.என்., தங்கள் கடனை திரும்பச்

மேலும்
img
KEMPEN BELI BARANGAN MALAYSIA

வாருங்கள் ஆதரிப்போம், மற்றும் வாங்குவோம்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img