வெள்ளி 17, செப்டம்பர் 2021  
img
img

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் களமிறங்கியுள்ள முன்னாள் விளையாட்டுப் பள்ளி மாணவர்கள்
சனி 24 ஜூலை 2021 15:57:12

img

 

புத்ராஜெயா, ஜூலை 24-

மலேசிய விளையாட்டுப் பள்ளியைச் சேர்ந்த 18 முன்னாள் மாணவர்கள் இம்முறை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் களமிறங்கவுள்ளனர். உலக மக்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தியுள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி கடந்தாண்டு ஜப்பான், தோக்கியோவில் நடைபெறவிருந்தது.

 

ஆனால் கோவிட்-19 தொற்றின் தாக்கத்தால் இவ்விளையாட்டுப் போட்டி இவ்வாண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது.அவ்வகையில் 32ஆவது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நேற்று தோக்கியோவில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. இப்போட்டியில் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 11 ஆயிரத்திற்கும் அதிகமான போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

 

கோவிட்-19 அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்த விளையாட்டுப் போட்டியை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஜப்பான் அரசு தொடர்ந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் மலேசியாவை பிரதிநிதித்து 30க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். 

 

நீச்சல், முக்குளிப்பு, பூப்பந்து, சைக்கிளோட்டம், ஜிம்னாஸ்டிக், கோல்ப், அம்பு எறிதல், குறிசுடுதல், ஓட்டப்பந்தயம், பாய்மரப் படகு ஆகிய போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளனர். 1 தங்கப்பதக்கம் உட்பட 3 பதக்கங்களை இலக்காகக் கொண்டு மலேசிய விளையாட்டாளர்கள் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டுள்ளனர்.

 

இந்த 30 விளையாட்டாளர்களில் 18 பேர் மலேசிய விளையாட்டுப் பள்ளியின் முன்னாள் மாணவர்களாவர்.

பூப்பந்து விளையாட்டில் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் லீ ஷீ ஜியா, சோனியா ஜியா, ஏரன் சியா, சோ வூய் யிக், லீ மெங் யின், கோ லியூ யிங் இகாயோர் விளையாட்டுப் பள்ளியில் பயின்றவர்கள். உள்ளரங்கு சைக்கிளோட்டப் போட்டியில் களமிறங்கும் டத்தோ முகமட் அஸிசூல்ஹஸ்னி அவாங், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை பாரா ஆன் அப்துல் ஹாடி, திடல்தடப் போட்டியில் களமிறங்கும் லீ ஹுப் வெய், அஸ்ரின் நபிலா அலியாஸ், நீச்சல் போட்டியில் களமிறங்கும் வெல்சன் சிம், அம்பு எறிதல் வீராங்கனை ஷாயிரா பின்தி மாஸ்சிக், முக்குளிப்புப் போட்டியாளர்கள் நூர் டபிதா சப்ரி, எங் யான் யீ, பண்டலேலா ரினோங், லியோங் முன் யீ, சியோங் ஜுன் வோங் ஆகியோரும் விளையாட்டுப் பள்ளி மாணவர்களாவர்.

 

மலேசியாவின் ஒலிம்பிக் பதக்க கனவை நிறைவேற்றப் போகும் வீரர்களின் பட்டியலில் விளையாட்டுப் பள்ளியின் மாணவர்களும் இருப்பதை கல்வியமைச்சு பெருமையாக கருதுகிறது. மலேசிய விளையாட்டு மன்ற கல்லூரியைச் சேர்ந்த பலர் இந்தப்போட்டியில் பங்கேற்கின்றனர். அவர்கள் மீது நாங்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்று கல்வியமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ரட்ஸி ஜிடின் கூறினார்.

 

தோக்கியோ ஒலிம்பிக் போட்டி இன்று ஜூலை 23ஆம்தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மலேசியாவைச் சேர்ந்த 30 வீராங்கனைகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றனர். அவர்களில் 18 பேர் மலேசிய விளையாட்டு கல்லூரியைச் சேர்ந்தவர்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். அந்தக் கல்லூரியைச் சேர்ந்த விளையாட்டாளர்களும் பயிற்சியாளர்களும் இந்த விளையாட்டுப் போட்டியில் மிகச் சிறந்த அடைவு நிலை அடைவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

 

இந்தப் போட்டியில் மிகச் சிறந்த சாதனைகளை படைப்பதற்காக அவர்களின் உடல்நலம், பாதுகாப்பு, ஆற்றல் ஆகியவை சிறந்த நிலையில் இருப்பதற்காக இறைவனை வேண்டிக் கொள்கிறோம் என்று அவர் கூறினார்.

 

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
2020ஆம் ஆண்டிற்கான கல்வி தவணை மார்ச் மாதம் முதல் தொடங்கப்படும்

2020ஆம் ஆண்டிற்கான கல்வி தவணை மார்ச் மாதம் முதல் தொடங்கப்படும். 2022ஆம்

மேலும்
img
கடனுதவிக்கு கைகொடுக்கும் பி.டி.பி.டி.என் பரிவுமிக்கத்திட்டம்

2020ஆம் ஆண்டிலிருந்து கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பு மக்களின் அன்றாட

மேலும்
img
மரணமடைந்த பாதுகாவலர் தேவசகாயத்தின் மனைவிக்கு சொக்சோவின் மாதாந்திர ஓய்வூதியம்!

மரணமடைந்த பாதுகாவலர் எஸ். தேவசகாயத்தின் மனைவிக்கு சொக்சோவின் மாதாந்திர

மேலும்
img
பி.டி.பி.டி.என். புதிய திட்டம் அறிமுகம் சிம்பானான் எஸ்.எஸ்.பி.என். பிளஸ்

சிறுகச் சிறுக சேமிக்கும் பழக்கம் பெரும்பாலான மலேசியர்கள் மத்தியில்

மேலும்
img
சொக்சோ ஏற்பாட்டில் செப். 6 முதல் 9 வரை 2021 அனைத்துலக பொது வேலை வாய்ப்பு ஆய்வரங்கம்

தொழிலாளர் சமூகப் பாதுகாப்பு அல்லது சொக்சோ வாரியத்தின் ஏற்பாட்டில் 2021 ஆம்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img