செவ்வாய் 10, டிசம்பர் 2024  
img
img

செப்டம்பர் முதலாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்!
திங்கள் 19 ஜூலை 2021 13:07:39

img

கோலாலம்பூர், ஜூலை 18-

வரும் ஆகஸ்ட் முதலாம் தேதி தொடங்கி பள்ளிகள் அனைத்தும் கட்டங்கட்டமாக திறக்கப்படும் என்று கல்வி அமைச்சு நேற்று அறிவித்தது.

இதுவரை நாட்டு மக்களுக்கு போடப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து அரசாங்கம் இம்முடிவை எடுத்துள்ளதாக அது கூறியது. தற்போது மாணவர்கள் வீட்டிலிருந்தவாறு இயங்கலை வழியாக மேற்கொண்டு வரும் கற்றல் - கற்பித்தல் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி தொடரும் என நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறப்பட்டது.

எனினும், தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள கோவிட் - 19 தொற்று குறித்து சுகாதார அமைச்சும் தேசிய பாதுகாப்பு மன்றமும் மேற்கொள்ளும் மதிப்பீட்டிற்கு ஏற்ப அது மாறுபடும் எனவும் அது கூறியது. இது நாட்டிலுள்ள அனைத்து அரசாங்க பள்ளிகள், அரசாங்க உதவிப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் உட்பட கல்வி அமைச்சில் பதிவு பெற்றுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பொருத்தும். ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினர், பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்த கல்வி அமைச்சு தேசிய நோய் தடுப்பு நடவடிக்கை குழுவிடம் தொடர்ந்து ஒத்துழைப்பு நடத்தும் எனவும் அந்த அறிக்கை கூறியது.

கடந்த 16.7.2021ஆம் தேதி வரை 2 லட்சத்து 53 ஆயிரத்து 366 ஆசிரியர்களுக்கும் (61.30 விழுக்காட்டினர்) 10,876 (46.33 விழுக் காட்டினர்) பணியாளர்களுக்கும் குறைந்தது ஒரு தடுப்பூசி போடப் பட்டுள்ளதாக அது கூறியது. நாட்டு மக்களுக்கு தடுப்பூசி போடப்படும் எண்ணிக்கையை வைத்தே வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி இயங்கலை வழி கற்றல் - கற்பித்தலை மேற்கொள்வதற்கும் செப்டம்பர் முதலாம் தேதி தொடங்கி நாட்டிலுள்ள   பள்ளிகள் கட்டங் கட்டமாக திறக்கப்படுவதற்கும் அரசாங்கம் முடிவு செய்ததாகவும் அந்த அறிக்கை கூறியது.

எனினும், சுகாதார அமைச்சு மற்றும் தேசிய பாதுகாப்பு மன்றத்தின் மதிப்பீட்டைத் தொடர்ந்து அதன் தேதி மாற்றம் காணலாம் எனவும் அது கூறியது. அரசாங்கம் அறிவிக்கும் எனவும் அந்த அறிக்கை கூறியது.

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img