ஞாயிறு 01, டிசம்பர் 2024  
img
img

விசுவாச முதலீட்டாளர்களுக்கான எஸ்.எஸ்.பி.என்.-ஐ (SSPN-i) திட்டம் பி.டி.பி.டி.என். அறிமுகம் செய்தது
வெள்ளி 26 பிப்ரவரி 2021 14:32:59

img

கோலாலம்பூர், பிப். 25-

தேசிய உயர் கல்வி நிதிக்கழகமான பி.டி.பி.டி.என். அதன் விசுவாச முதலீட்டாளர்களுக்காக ஒரு சதவீத விகிதத்தில் தேசியக் கல்வி சேமிப்புத் திட்டம் எஸ்.எஸ்.பி.என்.-ஐ (SSPN-i) அறிமுகம் செய்துள்ளது. நீண்ட கால அடிப்படையில் சேமிக்கும் முதலீட்டாளர்களுக்கு நன்றி பாராட்டும் வகையில் சிறப்பு வெகுமதியாக இந்த திட்டம் வழங்கப்படுகிறது. எஸ்.எஸ்.பி.என்.ஐ விசுவாச முதலீட்டாளர்களுக்கு தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த வெகுமதி வழங்கப்படுகிறது என பி.டி.பி.டி.என். தலைவர் டத்தோ வான் சைஃபுல் வான் ஜென் கூறினார்.

 இந்த சிறப்பு அறிமுகம் அமலில் இருக்கும் கால கட்டத்தில் மொத்தம் 500 வெள்ளி முதலீடு செய்யும் எஸ்.எஸ்.பி.என்.-ஐ முதலீட்டாளர்கள் இச்சலுகையை அனுபவிக்கலாம் என்று அவர் சொன்னார். இம்மாதம் 24 ஆம் தேதி தொடங்கி வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி வரையில் இச்சலுகை அமலில் இருக்கும். 2018 ஆம் ஆண்டுக்கு முன்னதாக எஸ்.எஸ்.பி.என்.-ஐ கணக்கை திறந்துள்ள முதலீட்டாளர்கள் இதில் பங்கேற்கலாம். இதற்குத் தகுதி பெறும் எஸ்.எஸ்.பி.என்.-ஐ முதலீட்டாளர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளும்படி வலியுறுத்தப்படுகின்றனர்.

நேற்றுக் காலையில் முகநூல் வாயிலான நேரலையின்போது வான் சைஃபுல் எஸ்.எஸ்.பி.என்.-ஐ விசுவாச வெகுமதி திட்டத்தை தொடக்கி வைத்தார். பி.டி.பி.டி.என். தலைமை நிர்வாகி அஹ்மட் டசுக்கி அப்துல் மாஜிட் உடனிருந்தார். ஆண்டு தோறும் வழங்கப்படும் லாப ஈவுக்கு கூடுதலாக இந்த எஸ்.எஸ்.பி.என்.-ஐ 2021 வெகுமதி வழங்கப்படுகிறது. 2020 ஆம் ஆண்டை பொறுத்த வரையில் பி.டி.பி.டி.என். வரலாற்றில் மிகவும் பெருமை வாய்ந்த ஒன்றாகும். கோவிட்-19 தொற்றின் காரணமாக பொருளாதார பாதிப்பு இருந்த போதிலும், 2020 இல் 199 கோடி வெள்ளி சேமிப்புடன் புதிய சாதனையை பி.டி.பி.டி.என். பதிவு செய்தது. 

இதன் காரணமாக, மற்ற நிதிக் கழகங்களுடன் ஒப்பிடுகையில் ஒரு தொடர்ச்சியான, நிலையான லாப ஈவை பி.டி.பி.டி.என். வழங்க முடிந்தது என்று வான் சை புல் மேலும் கூறினார். நிச்சயமாக 2020 ஆம் ஆண்டு லாப ஈவு அறிவிப்பு எஸ்.எஸ்.பி.என். முதலீட்டாளர்களுக்கு ஒரு நற்செய்தியாகவே விளங்கும். இது பலரின் பங்களிப்பு இன்றி சாத்தியமாகி இருக்காது. நம்மால் முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் கடுமையாக உழைத்த பி.டி.பி.டி.என். அதிகாரிகளுக்கு இவ்வேளையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

அதே சமயம், இந்த லாப ஈவை வழங்குவதற்கான அனுமதியை வழங்கிய உயர் கல்வி அமைச்சு மற்றும் பொருளாதார அமைச்சு உள்ளிட்ட அரசாங்க தரப்பினருக்கும் தாங்கள் நன்றி தெரிவிப்பதாக அவர் மேலும் சொன்னார். எஸ்.எஸ்.பி.என். லாப ஈவு 4 விழுக்காடு வழங்கப்படுவதானது பிள்ளைகளின் கல்விக்கான  முதன்மை சேமிப்பாக இதனை மாற்றும் என்பதில் ஐயமில்லை. 2021 பிப்ரவரி 26 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை முதல் www.ptptn.gov.my என்ற அதிகாரப்பூர்வ அகப்பக்கம் வாயிலாக தங்களின் எஸ்.எஸ்.பி.என். கணக்குகளில் லாப ஈவை எஸ்.எஸ்.பி.என். முதலீட்டாளர்கள் சரிபார்க்கலாம்.

2021 ஆம் ஆண்டுக்கு, மொத்தம் 180 கோடி வெள்ளி எஸ்.எஸ்.பி.என். முதலீட்டிற்கு பி.டி.பி.டி.என். இலக்கிட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு ஓர் உறுதியான இடத்தை அடைந்ததன் பயனாகவே இது சாத்தியமாகியுள்ளது. நிர்வாகம், முதலீடு, விற்பனை, தொடர்பு வியூகம் ஆகியவற்றில் பல்வேறான ஆக்ககரமான செயலாக்கத்தை வெளிப்படுத்த முடிந்ததே இந்த வெற்றிக்கான காரணமாகும். 2021 ஆம் ஆண்டு முழுவதும் இது அமல்படுத்தப்படும்.

எஸ்.எஸ்.பி.என். ஒரு சாதாரண சேமிப்பு கிடையாது. மாறாக, ஒரு குடும்பம் முழுவதற்கும் தேவையான சலுகைகளை இது வழங்குகிறது. ஓராண்டுக்கு 8,000 வெள்ளி வரைக்குமான வரி விலக்கு, 10,000 வெள்ளி வரைக்குமான ஈடான மானியம், சிறப்பான லாப ஈவு மற்றும்  தங்களின் பெற்றோருக்கு எதிர்பாராத விதமாக ஏதேனும் நேரிடும் பட்சத்தில் பிள்ளைகள் கல்வியைத் தொடருவதற்கு உதவும் தக்காஃபுல் பாதுகாப்பு, இறுதிச் சடங்கிற்கான செலவுகள் ஆகியன இவற்றில் அடங்கும்.

எனவே இனியும் காத்திராமல் எஸ்.எஸ்.பி.என். உடன் உங்கள் சேமிப்பை இன்றே தொடங்குங்கள். பிள்ளைகளின் எதிர்கால கல்விக்கான உத்திரவாதமாக எஸ்.எஸ்.பி.என். திட்டத்தை அவர்களுக்கு சிறந்த பரிசாக வழங்குங்கள். www.lovesspn.com  என்ற அகப்பக்கத்தின் வாயிலாக நீங்கள் சேமிப்பை திறக்கலாம் அல்லது சேமிப்பை அதிகரிக்கலாம்.

 

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img