வெள்ளி 17, செப்டம்பர் 2021  
img
img

டிஜி பிஸ்னஸ் திட்டம் 40% வரை வர்த்தக வளர்ச்சிக்கு உதவுகிறது
புதன் 28 அக்டோபர் 2020 13:35:09

img

 கோலாலம்பூர், அக். 22-

சிறியது முதல் பெரிய நிறுவனங்கள் வரையில் அனைத்து வகையான வணிகங்களுக்கும் இந்த 2020 ஆம் ஆண்டு மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இந்த மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை தயார்படுத்திக்கொள்ளத் தவறிய பலர் தங்கள் விற்பனையிலும் இலாபத்திலும் சரிவை எதிர்நோக்கினர். எனினும், அதிகமானவர்கள் இன்னும் புரிந்து கொள்ளாத ஒரு மிகப்பெரிய விஷயம் இன்னும் உள்ளது: ஒரு வணிகத்தின் அடிப்படை நிலையில் மாற்றம் என்றால் குறைந்த வாய்ப்புகள் என்று அர்த்தமாகி விடாது. இப்போதெல்லாம் மெய்நிகரான எத்தனையோ பயனீட்டாளர்கள் இருக்கின்றனர். இவர்கள் நேரடியாக நம்மோடு உள்ளவர்களாக இல்லாதிருந்தாலும் இணையம் போன்ற மாற்று வழிகளின் வழி நம்மோடு நம் பயனீட்டாளர்களாக இருக்கின்றனர் என்பது மறுப்பதற்கில்லை. 

பினாங்கில் தலைமையகத்தைக் கொண்ட கே.பி. சூன் ஹுவாட் (KB Soon Huat based in Penang) எனும் நிறுவனம இதற்கு சிறந்ததோர் எடுத்துக்காட்டாகும். இந்த சிரமமான காலத்தில் இந்நிறுவனம் அதன் இணையத்தள வழியான விற்பனைகளை 15 விழுக்காடு அதிகரித்துள்ளது.

இது தங்கள் குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனம் என்றும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மோட்டார் உபரி பாகங்கள் விற்பனை சம்பந்தப்பட்டது என்றும் கே.பி. சூன் ஹுவாட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கூ சின் வேய் கூறினார். கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக பாரம்பரிய முறைப்படி செயல்பட்டு வந்துள்ள இந்நிறுவனம் டிஜிட்டல் முறைக்கு மாறியது ஒரு மிகப்பெரிய முன்னுதாரண மாற்றமாகும் என அவர் சொன்னார்.

டிஜிட்டல் முறைக்கு மாறியது முதல் நாங்கள் எங்கள் விற்பனைக்கான பொருட்கள் பற்றிய விவரங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறோம். எங்கள் பயனீட்டாளர் வட்டத்தையும் விரிவாக்கம் செய்துள்ளோம். எங்கள் கடைக்கு நேரடியாக வர இயலாதவர்கள் இணையம் வாயிலாக எங்கள் பொருட்களை வாங்கலாம்சு என்று அவர் சொன்னார். இணையம் வாயிலான விற்பனைக்கு கூடுதலாக மொத்த வியாபாரத்தை 40 விழுக்காடு வரை அதிகரிக்க தங்களால் முடிந்துள்ளது என்றார் அவர்.

இவரைப் போலவே, மை ஹோம் லைஃப் (MyHomeLife) எனும் நிறுவனத்தின் உரிமையாளரான காவ் சூன் ஹூனும் தனது கருத்துகளை பகிர்ந்துகொள்கிறார். சமையலறை மற்றும் கழப்பறைகளில்  பயன்படுத்தும் உபகரணங்களை இந்நிறுவனம் விற்பனை செய்கிறது. இதுவரை பினாங்கு மற்றும் வட மலேசியாவிலிருந்து மட்டுமே எங்களுக்கு வாடிக்கையாளர்கள் இருந்து வந்துள்ளனர். ஆனால், இப்போது நாட்டின் மற்ற பகுதிகளில் இருந்தும் அதிகமான வாடிக்கையாளர்கள் தங்களுடன் தொடர்புகொண்டு வருகின்றனர் என்று அவர் சொன்னார்.

இதுவரை விற்கப்படாமல் இருந்த, மேலும் அதிகமாக கையிருப்பு இருந்த பொருட்களை தங்களால் விற்றுத்தீர்க்க முடிந்தது என அவர் குறிப்பிட்டார்.  எங்கள் வாடிக்கையாளர்கள் இணையம் வாயிலான எங்கள் பொருட்களை நேரடியாகப் பார்த்து, வாங்கி விடலாம். எங்கள் வியாபாரமும் 20 விழுக்காடு வளர்ச்சிக்கண்டுள்ளது என காவ் சூன் ஹூன் குறிப்பிட்டார்.

சுருங்கச் சொன்னால் டிஜிட்டல் விற்பனை முறை குறிப்பாக இந்த சிரமமான காலத்தில் அதிகமான வர்த்தக வாய்ப்புகளுக்கு வழி வகுத்துள்ளது. இணையம் வாயிலாக தங்களின் வணிகங்களை மேம்படுத்த உதவுவதற்கு சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவ டிஜி பிஸ்னஸ் திட்டம் தயாராக உள்ளது. டிஜி பிஸ்னஸ் திட்டத்துடன் வரும் டிஜிட்டல் தீர்வுகளும் உபகரணங்களும் எளிய முறையிலான வணிகத்திற்கு நிறுவனங்களுக்கு உதவுகிறது. இதன் வழி வணிக உரிமையாளர்கள் சுமூகமாகவும் வசதியாகவும் செயல்படுவதற்கு வகை செய்ய முடியும். சற்றும் எதிர்பாராத இன்றையச் சுழலில் வணிக நிறுவனங்கள் இப்படித்தான் செயல்பட முடியும் என்பதற்கு இந்நிறுவனங்கள் சான்று.        

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
2020ஆம் ஆண்டிற்கான கல்வி தவணை மார்ச் மாதம் முதல் தொடங்கப்படும்

2020ஆம் ஆண்டிற்கான கல்வி தவணை மார்ச் மாதம் முதல் தொடங்கப்படும். 2022ஆம்

மேலும்
img
கடனுதவிக்கு கைகொடுக்கும் பி.டி.பி.டி.என் பரிவுமிக்கத்திட்டம்

2020ஆம் ஆண்டிலிருந்து கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பு மக்களின் அன்றாட

மேலும்
img
மரணமடைந்த பாதுகாவலர் தேவசகாயத்தின் மனைவிக்கு சொக்சோவின் மாதாந்திர ஓய்வூதியம்!

மரணமடைந்த பாதுகாவலர் எஸ். தேவசகாயத்தின் மனைவிக்கு சொக்சோவின் மாதாந்திர

மேலும்
img
பி.டி.பி.டி.என். புதிய திட்டம் அறிமுகம் சிம்பானான் எஸ்.எஸ்.பி.என். பிளஸ்

சிறுகச் சிறுக சேமிக்கும் பழக்கம் பெரும்பாலான மலேசியர்கள் மத்தியில்

மேலும்
img
சொக்சோ ஏற்பாட்டில் செப். 6 முதல் 9 வரை 2021 அனைத்துலக பொது வேலை வாய்ப்பு ஆய்வரங்கம்

தொழிலாளர் சமூகப் பாதுகாப்பு அல்லது சொக்சோ வாரியத்தின் ஏற்பாட்டில் 2021 ஆம்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img