வியாழன் 12, டிசம்பர் 2024  
img
img

60 விவசாயிகளின் நிலம் அழிப்பு: கேமரன் மலையில் கொந்தளிப்பு!
செவ்வாய் 24 டிசம்பர் 2019 10:17:21

img

ஆற்றில் தூய்மைக்கேட்டை ஏற்படுத்துவதாகக் கூறி, 60 கேமரன் மலை இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு உலைவைக்கும் வகையில் அவர்களின் விவசாய நிலங்களை மாநில அரசாங்கம் நேற்று தரைமட்டமாக்கிய அதே சமயம், மக்கள் நலனைக் கவனிக்காத அரசாங்கம் தங்களுக்குத் தேவையில்லை எனக்கூறி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ள ம.இ.கா. தலைவர்கள் அதிரடியாய் கூண்டோடு விலகினர்.

இச்சம்பவம் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பகாங் மாநிலத்தில் தேசிய முன்னணி அரசாங்கம் அமைந்திருக்கும் நிலையில் தங்கள் மக்களின் நலனில் சிறிதும் அக்கறை இல்லாமல் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது என தங்களின் ராஜினாமா குறித்து மாநில மந்திரி புசாருக்கு தகவல் தெரிவித்த அவரின் சிறப்பு அதிகாரியான ஆறுமுகம் ஏ.வி.பிள்ளை மலேசிய நண்பனிடம் தெரிவித்தார்.

இதனிடையே, மக்களுக்கு உதவாத அரசாங்கத்தில் நாங்கள் இருந்து என்ன நன்மை. தேசிய முன்னணிக்காக கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியை அம்னோவிற்கு விட்டுக்கொடுத்தோம். ஆனால், விவசாயிகளின் பிழைப்பில் மண்ணைப் போட்டிருப்பது நம்பிக்கைத் துரோகத்திற்கு சமம் என கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனை மலேசிய நண்பன் தொடர்பு கொண்டபோது கூறினார்.

தனது உத்தரவின் பேரிலேயே கூண்டோடு பதவிகளை ராஜினாமா செய்ய அந்த 12 பேரும் முடிவு எடுத்ததாக அவர் தெரிவித்தார்.

ராஜினாமா செய்தவர்களில் மாநில மந்திரி புசாரின் சிறப்பு அதிகாரி  ஆறுமுகம் ஏ.வி.பிள்ளை, மற்றும் ம.இ.காவை பிரதிநிதித்து பதவி வகித்து வந்த 11  உள்ளூராட்சி மன்ற  உறுப்பினர்களான  ஆறுமுகம் (பெந்தோங்),  முனியாண்டி  (ரவுப்),  முருகன் (பெரா), இஸ்மாயில் (தெமெர்லோ), சுப்பிரமணியம் (கோலலிப்பிஸ்), டத்தோ ரவி (கேமரன் மலை), டத்தோ மார்த்தாண்டோ  (பாயா பெசார்), டத்தோ பெரியண்ணன் (ரொம்பின்), வடிவேலு (ஜெராண்டுட்), பூங்காவனம் (மாரான்), டத்தோ கிருஷ்ணா (பெக்கான்) ஆகியோரும் பதவி விலகியுள்ளனர்.

பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் அனைவரும் இங்கு நான்கைந்து தலைமுறைகளாக விவசாயம் செய்து வந்தவர்கள். ஆனால், ஆரம்பம் முதல் நாங்கள் முன்வைத்த எந்த கோரிக்கையையும் மாநில அரசாங்கம் கவனத்தில் கொள்ளவில்லை என ஆறுமுகம் கூறினார்.

தங்களின் இந்த ராஜினாமா குறித்து மந்திரி பெசாருக்கு தகவல் தெரிவித்திருப்பதாகவும், ஆனால், இதுவரை எந்தப் பதிலும் அவரிடமிருந்து வரவில்லை என்றும் அவர் கூறினார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img