செவ்வாய் 15, அக்டோபர் 2024  
img
img

குளு, குளு கேமரன் மலையில் கொதித்தெழுந்த விவசாயிகள்!
செவ்வாய் 24 டிசம்பர் 2019 10:11:08

img

குளு, குளு கேமரன் மலையில் பழங்கள், காய்கறிகள், தேயிலைத் தோட்டங்கள் என எங்கும் பசுமையாகவே காட்சியளித்தாலும் அங்கு தங்களின் வாழ்வாதாரத்திற்காகப் போராடும் இந்திய விவசாயிகளின் வாழ்வில் எந்த பசுமையையும் காண முடியவில்லை.

இங்குள்ள கோல தெர்லாவில் 40 ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்த 60 இந்திய விவசாயிகளின் நிலங்கள் நேற்று அழிக்கப்பட்டபோது, தங்கள் வியர்வையைச் சிந்தி உருவாக்கப்பட்ட விவசாய நிலங்கள் தரைமட்டமானதைக் கண்டு அவர்கள் சோகத்தில் மூழ்கினர்.

அந்த 60 விவசாயிகளின் நிலங்களையும் பகாங் மாநில நில அமலாக்க அதிகாரிகள்  நேற்று உடைத்து நாசப்படுத்தினர். முன்னதாக இந்த நிலத்திற்கு மாற்று இடம் கோரி நடத்தப்பட்ட போராட்டங்கள் பயனற்றுப்போயின.

நேற்று அவர்களின் நிலம் தரைமட்டமாக்கப்பட்ட போது   எங்களுக்கு மாற்று இடம் கொடுங்கள், இடத்தைக் காலி செய்ய அவகாசம் கொடுங்கள் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் எழுப்பிய கோரிக்கைகள் செவிடன் காதில் ஊதிய சங்கு கதையானது. அவர்கள் அனைவரும் குந்தியிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாதுகாப்பு கருதி அங்கு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். குந்தியிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கட்டாயப்படுத்தி கலைத்தனர், அதில் அறுவர் கைது செய்யப்பட்டு பின்னர்  விடுவிக்கப்பட்டனர். அவர்களில் முன்னாள் பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணனும் , ம.இ.கா. இளைஞர் பகுதி செயலாளர் க. தியாகேஸ், விவசாயியான மணிமாறன் ஆகியோரும் அடங்குவர்.

விவசாயிகளின் இந்த நிலப்பிரச்சினை குறித்து  கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினர் ரம்லி, தனது சொந்தத் தொகுதியில் வாக்காளர்களாக இருக்கும் அந்த இந்திய விவசாயிகளை சந்திக்கவில்லை. மேலும், பகாங் மந்திரியிடமும் அது பற்றி பேசவில்லை.

கேமரன் மலை சிறப்பு தீர்வுக் குழு, விவசாயிகளின் மனக் குமுறலை கேட்காமல் சுயமாக ஒரு முடிவை எடுத்துள்ளது. எனவே, இந்த சிறப்பு தீர்வுக் குழுவின் முடிவு அநியாயமானது, பொறுப்பற்றது. இந்த குழு இப்பிரச்சினைக்கு எந்தத் தீர்வும் காணவில்லை என்று  ம.இ.கா சார்பில் வந்திருந்த வழக்கறிஞர் ராஜசேகரன் கூறினார்.

பின்செல்

உள்ளூர் செய்திகள்

img
நாட்டில் வேலை செய்ய வங்காளதேச தொழிலாளர்களுக்கு மீண்டும் அனுமதி!

அமைச்சர் எம்.குலசேகரன்

மேலும்
img
இம்மாதம் 20ஆம் தேதி பி.எஸ்.எச். உதவித் தொகை!

பி40 எனப்படும் குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு மட்டுமே இந்த உதவித்

மேலும்
img
குளு, குளு கேமரன் மலையில் கொதித்தெழுந்த விவசாயிகள்!

40 ஆண்டுகள் உழைத்த விவசாய நிலங்கள் தரைமட்டம்

மேலும்
img
30 ஆண்டு காலமாக நாட்டின் முதல் எதிரியாக போதைப்பொருள்

இவ்வாண்டு ஜனவரி தொடங்கி நவம்பர் மாதம் வரை போதைப்பொருள் தயாரிக்கும் 19

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img