திங்கள் 02, அக்டோபர் 2023  
img
img

மோடிக்கு பயங்கரவாதிகள் குறி
சனி 21 டிசம்பர் 2019 09:48:34

img

பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பு டிச.22ஆம் தேதி டில்லி ராம்லீலா மைதானத்தில் பேச இருக்கும் பிரதமர் மோடியைக் குறிவைத்துள்ளதாக உளவுத்துறை தகவல் அளித்துள்ளது.

டில்லியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக பிரதமர் மோடி  நாளை 22ஆம் தேதி டில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் பிரச்சாரம் நடத்தவுள்ளார். இதில், அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வசிப்பவர்கள் கலந்து கொள்வார்கள் என பாஜ. அறிவித்திருந்தது. இந்த கூட்டத்தில் பாஜ. கூட்டணி முதல்வர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்க இருக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளும் நடந்து வந்தன. இந்நிலையில், இந்தக் கூட்டத்தில் மோடியை பயங்கரவாதிகள் குறிவைத்துள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் பிரதமரின் பாதுகாப்பிற்காக நீலப் புத்தகத்தில் உள்ள வழிமுறைகளை முழுமையாகச் செயல்படுத்துமாறு, சிறப்பு பாதுகாப்பு குழு மற்றும் டில்லி போலீசாருக்கு உளவுத்துறை சார்பில் தகவல் அளிக்கப்பட்டன.

இது குறித்து உளவுத்துறை சார்பில் கூறப்படுவதாவது: மோடி பங்கேற்கும் கூட்டத்தில் பெரிய கூட்டமும் அதிகமான ஊடகங்களும் வருமென எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கூட்டத்தில் தாக்குதல் நடத்த பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பான ஜெஷ்-இ-முகமது செயற்பாட்டாளர்கள், அணி திரட்டப்பட்டுள்ளனர். குடியுரிமை திருத்த சட்டம், அயோத்தி தீர்ப்பு, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செயப்பட்டது என்பன போன்ற, மோடியின் நடவடிக்கையால் இந்த தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளனர். இவ்வாறு உளவுத்துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img