வியாழன் 12, டிசம்பர் 2024  
img
img

உரிமைகளுக்காகப் போராடியவர் உரிமைகளைப் பெற்றுத்தந்தாரா? செனட்டர் மோகன் கேள்வி
வெள்ளி 20 டிசம்பர் 2019 14:12:35

img

ஹிண்ட்ராப் போராட்டவாதியாக தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டு இன்று அரசாங்கத்தில் உயரிய பதவியைத் தக்க வைத்துக்கொண்டுள்ள பொன்.வேதமூர்த்தி, மலேசிய இந்தியர்கள் குறை சொல்லியே பழக்கப்பட்டவர்கள் என்று ஒட்டுமொத்த சமுதாயத்தையும்  இழிவு படுத்தும் வகையில் ஊடகத்தில் பேசியிருப்பது இந்த சமுதாயத்தை தேரோட்டத்திற்கு இட்டுச்செல்லும் ஒரு செயல் என செனட்டர் டத்தோ த.மோகன்  வர்ணித்துள்ளார்.

மக்களவையில்  கேள்வி  நேரத்தின்  போது தான் எழுப்ப  வந்த கேள்வியை   முழுமையாகக் கேட்காமல்   உணர்ச்சிவசப்பட்ட  வேதமூர்த்திக்கு இந்திய    சமூகத்தை வழி நடத்தும் ஆற்றல்   அறவே இல்லை என்பதை யார் வேண்டுமானாலும்  அளவிட  முடியும் என்பதை மோகன் வலியுறுத்திக் கூறினார்.

 அவரை நம்பி ஹிண்ட்ராப்  போராட்டத்தில்  கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான  இந்தியர்களின்  உரிமைகளை    இந்த ஈராண்டுகளில் அவர் பெற்றுக்கொடுத்துள்ளாரா என்று ம.இ.கா. தேசிய உதவித்தலைவருமான அவர் வினவினார்.

ஹிண்ட்ராப் பேரணிக்கு  அஸ்திவாரமே பிரிட்டன்  அரசாங்கத்தின் மீது வேதமூர்த்தி தொடுத்த வழக்குதான் என்பதை அவரும் நிச்சயமாக மறுக்க மாட்டார்.

மலாயா   சுதந்திர பிரகடனத்தின் போது இந்தியர்களின் அடிப்படை  உரிமைகளுக்கான வாய்ப்புகளை பிரிட்டிஷ் அரசாங்கம்   அதில் இணைக்கவில்லை என்பது வேதமூர்த்தியின் வாதம். 

 ஒவ்வொரு மலேசிய இந்தியருக்கும் வெ.4 மில்லியனை    இழப்பீட்டுத் தொகையாக பிரிட்டிஷ் அரசாங்கம் வழங்க வேண்டும் என   முழங்கியவர் தற்போது அரசாங்கத்தில்  அமைச்சர் பொறுப்பை  ஏற்றிருக்கும்   நிலையில் ஏன்  இன்னும் அந்த உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க முடியவில்லை?

 இந்த கேள்விகளுக்குப் பதில் தராமல், பிரச்சினையை  திசை திருப்பியுள்ள  அவரின்  அரசியல்  சாணக்கியத்தை மலேசிய  இந்தியர்கள் உணர்ந்து  கொள்வார்கள் என்பதைத் தெளிவுபடுத்தினார் செனட்டர் மோகன்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img