வெள்ளி 17, செப்டம்பர் 2021  
img
img

ஹோப்புள் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் முதலாம் ஆண்டு மாணவர்களை அதிகரிக்க தீவிர முயற்சி
வியாழன் 19 டிசம்பர் 2019 09:14:07

img

பெஸ்தாரி ஜெயா ஹோப்புள் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் அடுத்தாண்டு முதல் வகுப்பில் இதுவரை நான்கு பிள்ளைகள் மட்டுமே பதிந்து கொண்டுள்ளனர்.

2019 இல் (இவ்வாண்டு) முதல் வகுப்பில் மூன்று மாணவர்கள் மட்டுமே  பயின்றனர். இப்பள்ளியில் மொத்த  மாணவர்களின் எண்ணிக்கை 17 என பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் நந்தகுமாரி சிங்காரம் (37) கூறினார்.

பெஸ்தாரி ஜெயாவிலிருந்து சுமார் 8 மைல் தொலைவில் உள்ள ஹோப்புள் தோட்டத்தில் (சுங்கை திங்கி தோட்டத்திற்கு அருகில்) தற்சமயம் 5 அல்லது 6 தமிழ்த் தொழிலாளர் குடும்பங்களே எஞ்சியியுள்ளன.

1990 ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிகமான தொழிலாளர்கள் இத்தோட்டத்தை விட்டு வெளியேறினர். இதனால் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை வீழ்ச்சிக் காணத் தொடங்கியது.

தோட்டத்திலிருந்து யாரும் இங்கு கல்வி பயிலாத நிலையில், பள்ளி நிர்வாகம், பெ.ஆ.சங்க முயற்சியில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 இங்கு கல்வி பயிலும் மாணவர்கள் பெரும்பாலும்  பெஸ்தாரி ஜெயா, கம்போங் பெர்ஜுந்தை பெஸ்தாரி  ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள். 

மாணவர்கள் எண்ணிக்கை சரிவுக்கு போக்குவரத்து பிரச்சினையும் ஒரு காரணமாகும். இதற்கு தீர்வு பிறந்தால் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என பெஸ்தாரி ஜெயாவிலிருந்து தினமும் இப்பள்ளிக்கு தன் மகளை காரில் அழைத்துச் செல்லும் நந்தகுமாரி நம்பிக்கை தெரிவித்தார்.

பின்செல்

உள்ளூர் செய்திகள்

img
நாட்டில் வேலை செய்ய வங்காளதேச தொழிலாளர்களுக்கு மீண்டும் அனுமதி!

அமைச்சர் எம்.குலசேகரன்

மேலும்
img
இம்மாதம் 20ஆம் தேதி பி.எஸ்.எச். உதவித் தொகை!

பி40 எனப்படும் குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு மட்டுமே இந்த உதவித்

மேலும்
img
குளு, குளு கேமரன் மலையில் கொதித்தெழுந்த விவசாயிகள்!

40 ஆண்டுகள் உழைத்த விவசாய நிலங்கள் தரைமட்டம்

மேலும்
img
30 ஆண்டு காலமாக நாட்டின் முதல் எதிரியாக போதைப்பொருள்

இவ்வாண்டு ஜனவரி தொடங்கி நவம்பர் மாதம் வரை போதைப்பொருள் தயாரிக்கும் 19

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img