தம்முடைய கைலாசா நாட்டின் குடிமக்கள் ஆவதற்கு உலகெங்கிலுமிருந்து 40 லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதாக சாமியார் நித்தியானந்தா கூறியுள்ளார்.
சிறுமிகள் கடத்தல், பாலியல் தொந்தரவு என பல்வேறு விதமான புகார்களும் சர்ச்சைகளும் நித்தியானந்தா மீது ஒரு புறம் அணி வகுத்து நின்றாலும் மறுபுறம் தனது சத்சங்கத்தை வழக்கம்போல் தொடர்ந்து வருகிறார். அவர் எங்கிருக்கிறார் என்கிற மர்மம் ஒருபுறம் நீடித்து வரும் அதே வேளையில் மறுபுறம் இணையத் தளம் மூலம் தனது சத்சங்கத்தில் அதிரடியாக பேசி வருகிறார் சாமியார் நித்தியானந்தா.
நேற்று அவர் நடத்திய சத்சங்கத்திலும் அந்த அதிரடிகள் தொடர்ந்தன. தன்னைப் பற்றி வரும் மீம்ஸ்களால் வருத்தம் அடையவில்லை என்றும் மீம்ஸ் போடுகிற மாம்ஸ்கள் ஜாலியாக இருக்கட்டும் நானும் ஜாலியாக இருக்கிறேன் என நித்தியானந்தா கூறினார்.
கைலாசா நாடு அமைக்கும் திட்டத்தால் தமக்கு அடிதான் விழும் என்று நினைத்ததாகவும் ஆனால் அதற்கு மாறாக ஆதரவு பெருகி வருவதாகவும் சாமியார் நித்தியானந்தா தெரிவித்துள்ளார். கைலாசா நாட்டில் குடிமக்கள் ஆவதற்காக உலகெங்கிலுமிருந்து 40 லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதாகவும் நித்தியானந்தா கூறினார்.
பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்கோழிக்கோடு, ஏப். 30- கோழிக்கோடு மாவட்டத்தில் பாக்டீரியாவால் மீண்டும் 2
மேலும்திருச்சி, ஏப். 30- ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம், ரங்கா
மேலும்இந்தியாவின் டில்லியில் நடைபெற்ற தப்ளிக் சமய விழாவில் கலந்து கொண்ட
மேலும்பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பு டிச.22ஆம் தேதி
மேலும்