ஞாயிறு 01, டிசம்பர் 2024  
img
img

அரை நூற்றாண்டுக்கும் மேலாக சீனப்பள்ளியில் செயல்படும் ஜெங்கா,சுங்கை ஜெரிக் தமிழ்ப்பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட நிலம், நிதி எங்கே?
வியாழன் 12 டிசம்பர் 2019 17:21:39

img

ஐம்பது (50) ஆண்டுகளுக்கும் மேலாக சீனப்பள்ளியின் ஓர் அங்கமாக செயல்பட்டு வரும் பகாங், ஜெங்கா, சுங்கை ஜெரிக் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளிக்கு புதிய கட்டடம் ஒன்றை எழுப்பும் நோக்கத்தில் திட்டங்கள் வரையப்பட்டு, அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்ட நிலையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது குறித்தும் அப்பள்ளிக்காக ஒதுக்கப்பட்ட நிதி நிலைமை குறித்தும் அவ்வட்டார மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

முந்தைய தேசிய முன்னணி அரசாங்கத்தின் கீழ், டத்தோ ப.கமலநாதன் கல்வி துணை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் சுங்கை ஜெரிக் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளியை நிர்மாணிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு, நிதியும் ஒதுக்கப்பட்டதாக அறியப்படுகிறது. எனினும், 14 ஆவது பொதுத்தேர்தலுக்கு முன்னதாக வழங்கப்பட்ட இந்த வாக்குறுதி, பொதுத்தேர்தலில் தேசிய முன்னணியின் படுதோல்வியின் காரணமாக கிடப்பில் போடப்பட்டிருப்பதாகவும் தெரிய வருகிறது. எனினும், நடப்பு நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம்தான் இதற்கான முயற்சியை எடுக்க வேண்டும் என பகாங் ம.இ.கா.தலைவரும் மாநில மந்திரி புசாரின் சிறப்பு அதிகாரியுமான ஆறுமுகம் கூறினார்.

இப்பள்ளியின் நிர்மாணிப்புக்காக ஒதுக்கப்பட்ட நிலம் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்து நடப்பு மத்திய அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும் என அவர் வலியுறுத்தினார். பகாங், ஜெங்கா, சுங்கை ஜெரிக் தமிழ்ப்பள்ளி கடந்த சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சுங்கை ஜெரிக் சீன ஆரம்பப் பள்ளியில் ஓர் அங்கமாக செயல்பட்டு வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டின் விவரங்களின்படி, சீன ஆரம்பப்பள்ளியில் 162 மாணவர்கள் இருந்தனர். கூடுதலாக தமிழ்ப்பிரிவில் 26 மாணவர்கள் கல்வி கற்றனர். 

தமிழ், சீனம் என இரண்டு மொழி வகுப்புகளும் இரு பிரிவுகளாக ஒரே பள்ளியில் நடத்தப்படுவது மலேசியாவில் இந்த ஒரு பள்ளி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஜெரிக் சீனப்பள்ளியில்தான் தமிழ்ப்பிரிவு நடைபெற்று வருகிறது. அந்த 162 மாணவர்களில் 95 பேர் சீன மாணவர்கள், 30 இந்திய மாணவர்கள், 33 மலாய் மாணவர்கள் அடங்குவர். சில இந்திய மாணவர்கள் அங்கு சீன மொழி வகுப்புகளில் கல்வி பயின்று வருகின்றனர்.

சுங்கை ஜெரிக் சீன ஆரம்பப்பள்ளி 1956 இல் ஒரு வெட்டுமரத் தொழிற்சாலையில் தொடங்கப்பட்டது. 1966இல் அது தற்போதுள்ள இடத்திற்கு மாற்றப்பட்டது. மூன்றாண்டுகளுக்குப் பிறகு, மாலை நேர வகுப்புகளாக தமிழ்ப்பள்ளி அச்சீனப்பள்ளியின் வகுப்பறைகளைப் பயன்படுத்தத் தொடங்கியது. 

1980 ஆம் ஆண்டு வாக்கில் நிதி திரட்டும் நடவடிக்கையின் வாயிலாக அங்கு கூடுதலான வகுப்பறைகள் நிர்மாணிக்கப்பட்டன. காலப்போக்கில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததைத் தொடர்ந்து தமிழ்ப்பள்ளி மாணவர்களும் காலை நேரத்திலேயே வகுப்புக்கு வரத் தொடங்கினர். அப்பள்ளியின் இயக்குநர் வாரியத் தலைவர் வூ யூ ஜீ  இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

தமிழ்ப்பள்ளி பிரிவுக்கு தமிழ் ஆசிரியரும் அவரே ஒருங்கிணைப்பாளராகவும் நியமனம் செய்யப்பட்டிருந்தாலும் அதன் நிர்வாகம் சீனப்பள்ளியின் கீழ்தான் இயங்குகிறது. கல்வி அமைச்சுடனான அனைத்து கடிதம், இதர தொடர்புகளையும் சீனப்பள்ளி நிர்வாகம் கவனிக்கும் எனவும் அறியப்படுகிறது. 

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img