செவ்வாய் 10, டிசம்பர் 2024  
img
img

இலங்கையில் 4 ஆயிரம் பெண்களுக்கு  கட்டாய கருத்தடை அறுவை சிகிச்சை!
வெள்ளி 31 மே 2019 18:28:23

img

கொழும்பு, 

இலங்கையில் அறுவை சிகிச்சை முறை மூலம் பிரவசம் பார்த்தபோது 4 ஆயிரம் பெண்களுக்கு கட்டாய கருத்தடை அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் சியாபுதீன் முஹம்மது சபியை போலீசார் கைது செய்தனர்.இலங்கையில் திரிகோணமலை நெடுஞ்சாலையில் கருணாகல் பயிற்சி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைக்காக வரும் பெண்களுக்கு அறுவை சிகிச்சை முறை மூலம் பிரசவம் பார்த்தபோது 4 ஆயிரம் பெண்களுக்கு கட்டாயப்படுத்தி கருத்தடை அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் சியாபுதீன் என்பவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

குறிப்பாக, அரபு நாட்டு செல்வந்தர்களின் கைக்கூலியாக செயல்பட்ட மருத்துவர் சியாபுதீன் முஹம்மது சபி இந்து, புத்த மதங்களைச் சேர்ந்த பெண்க ளுக்கு அடுத்த வாரிசு பிறக்காமல் இருப்பதற்காக பிரசவம் முடிந்து மயக்க நிலையில் இருந்த பெண்களுக்கு தெரியாமல் இப்படி அவர்  கட்டாய கருத்தடை அறுவை சிகிச்சை செய்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.இதற்காக  அரபு நாட்டு செல்வந்தர்கள் அளித்த கைக்கூலி தொகை யின் மூலம் சுமார் 40 கோடி ரூபாய் அளவு மருத்துவர்களுக்கு சொத்துக்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து கடந்த 24ஆம் தேதி டாக்டர் சியாபுதீன் முஹம்மது சபியை போலீசார் கைது செய்தனர். தற்போது இந்த வழக்கை சி.ஐ.டி. போலீசார் விசா ரித்து வருகின்றனர். அவரால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிப்பதற்காக கருணாகல் பயிற்சி மருத்துவமனை வளாகத்தில் தனியாக தற்காலிக அலுவல கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று நாட்களில் சுமார் 150 பெண்கள் மருத்துவர் மீது புகார் அளித்துள்ளனர். கைது செய்யப்பட்ட மருத்துவரிடம் போலீசார் தொடர்ந்து விசா ரித்து வரும் நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணையை நடத்த சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து இலங்கை சுகாதாரத்துறை மந்திரி ரஜிதா சேனரத்னே உத்தரவிட்டுள்ளார்.

சிலோன் மகப்பேறு மருத்துவக் கல்லூரியை சேர்ந்த மூன்று உறுப்பினர்களும் இலங்கை மருத்துவ கவுன்சிலை சேர்ந்த ஒரு உயரதிகாரியும் இந்த சிறப்பு விசாரணைக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். புகார் அளிக்கும் பெண்களுக்கு முறையான மருத்துவ பரிசோதனைகளை செய்து இந்த குழுவினர் அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img