செவ்வாய் 10, டிசம்பர் 2024  
img
img

தென்னிலங்கையில் மீண்டும் கலவரம் -வீடுகள்-கடைகள் தீக்கிரை 
புதன் 15 மே 2019 15:37:43

img

கொழும்பு, 

தென்னிலங்கையின் சில பகுதிகளில் மீண்டும் கலவரம் ஏற்பட்டுள்ளது. வீடுகள், கடைகள், கட்டடங்கள் ஆகியவை கலவரக்காரர்களால் தீ வைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளன. தென்னிலங்கையின் குருணாகல் மாநிலத்தில் சில இடங்களில் சிங்கள அமைப்புகளைச் சேர்ந்த சிலர்,கடைகளுக்கு  தீ வைத்தனர். 

கடந்த ஈஸ்டர்  தினத்தன்று நடந்த மனித வெடிகுண்டு தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் பலியானதைத் தொடர்ந்து இலங்கையில் பதற்ற நிலை நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வடபகுதியில் இருவேறு மதத்தினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது.  தென்னிலங்கை பகுதியில் கலவரங்கள் வெடித்துள்ளன. தென்னிலங்கையில் அமைந்திருந்த அரபிக் கல்லூரி ஒன்று தீ வைக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. 

இந்தப்  பகுதிகளுக்கு உடனடியாக இலங்கை ராணுவம் அனுப்பப்பட்டிருக்கிறது. கலவரப் பகுதிகளில் ஆயுதப் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பை நிலைநிறுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஈஸ்டர் தினத்தன்று நடந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு பொறுப்பானவர்களை உடனடியாக தண்டிக்க வேண்டும் என்று சிங்கள  அமைப்புகள் பல கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த கலவரம் வெடித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img