செவ்வாய் 28, செப்டம்பர் 2021  
img
img

மாயா மீது மோடி திடீர் பாசம்: உ.பி., அரசியலில் ஏற்படும் மாற்றம்
திங்கள் 06 மே 2019 15:52:30

img

புதுடில்லி:

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியை நோக்கி மோடி நகரும் சாத்தியக் கூறுகள் தெரிவதால், உ.பி., அரசியலில் திடீர் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

பகுஜனுக்கும் பா.ஜ.,வுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம். உ.பி.,யில் பிரசாரம் செய்த ஊர்களில் எல்லாம் மாயாவதியை கடுமையாக தாக்கி பேசினார் மோடி. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் ஒரு கூட்டத்தில் பேசிய மோடி, மாயாவதி பற்றி குறிப்பிடும்போது ‛சகோதரி' என்றார். மோடியின் இந்த மாற்றம் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

மோடியின் இந்த மாற்றத்தை ராஜதந்திரமாக பா.ஜ.,வினர் கருதுகின்றனர். தேர்தல் முடிவில் ஆட்சி அமைக்க இடங்கள் குறைந்தால், மாயாவதியின் ஆதரவு தேவைப்படலாம் என்று மோடி எண்ணுவதாக கட்சியினர் கருதுகின்றனர்.அது மட்டுமல்லாமல், உ.பி.,யில் பா.ஜ.,வுக்கு கடும் போட்டியை கொடுக்கும் சமாஜ்வாதி - பகுஜன் கூட்டணிக்கு இடையே பிளவை ஏற்படுத்தும் முயற்சியாகவும் மோடி இப்படி செய்திருக்கலாம் என்கிறார்கள்.

பிரதாப்கர் என்ற இடத்தில் பேசிய மோடி, ‛‛சமாஜ்வாதியும் காங்கிரசும் மாயாவதியை ஏமாற்றி விட்டன. மாயாவதியுடன் கூட்டணி வைத்ததால் சமாஜ்வாதிக்கு தான் லாபம். உங்களை பிரதமராக்குகிறோம் என்று மாயாவதியிடம் மற்ற கட்சிகள் ஆசைகாட்டி உள்ளன. அவருடன் மற்ற கட்சிகள் விளையாடி உள்ளன என்பதை சகோதரி (மாயா) புரிந்துகொள்ள வேண்டும். சமாஜ்வாதி கட்சி கூட்டத்தில் ஒரு காங்., தலைவர் ஏன் கலந்துகொண்டார்'' என்றார்.ரேபரேலியில் நடந்த ஒரு சமாஜ்வாதி கூட்டத்தில் பிரியங்கா கலந்துகொண்டதையே மோடி இவ்வாறு குறிப்பிட்டார்.

மோடி இப்படி பேசினாலும் மாயா வேறு மாதிரி பேசுகிறார். அவர், ‛‛பிரித்தாளும் சூழ்ச்சியை மோடி பயன்படுத்துகிறார். எங்கள் கூட்டணியை பிரிக்கும் முயற்சியில் அவர் தோற்றுப் போவார்'' என்றார்.

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் கூறும்போது, ‛‛எங்கள் கூட்டணியைப் பார்த்து மோடி பயப்படுவதையே இது காட்டுகிறது'' என்றார். சமாஜ்வாதி கட்சியினர் கூறும்போது, ‛‛கிழக்கு உ.பி.,யில் அடுத்த கட்ட தேர்தல்கள் நடக்க உள்ளன. இப்பகுதியில் சமாஜ்வாதி - பகுஜன் கூட்டணி வலுவாக உள்ளது. குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவே மோடி அப்படி பேசி உள்ளார்'' என்கின்றனர்.

பா.ஜ., - சமாஜ்வாதி இடையே இதற்கு முன்பு 3 முறை கூட்டணி ஏற்பட்டுள்ளது. எனவே, பா.ஜ., - சமாஜ்வாதி கூட்டணி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதை மறுக்க முடியாது.இதை மனதில் வைத்துதானோ என்னவோ, சமாஜ்வாதி - பகுஜன் கூட்டணியை ராகுல் தாக்கி பேசி வருகிறார். இக்கூட்ட ணியை பா.ஜ., ரிமோட் மூலம் கட்டுப்படுத்துகிறது என்கிறார் ராகுல். இதனால் கடுப்பான அகிலேஷ், ‛‛பா.ஜ.,வுக்கும் காங்.,கிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை''என்று கூறுகிறார்.

உ.பி.,யில் அடுத்த கட்ட தேர்தல்கள் நடக்க உள்ள கிழக்கு உ.பி.,யில் காங்.,கிற்கு நிறைய செல்வாக்கு உள்ளது. 2009 தேர்தலில் ஒரு டஜனுக்கும் அதிகமான தொகுதிகளில் காங்., வெற்றி பெற்றது. இம்முறையும் பா.ஜ.,வின் கணிசமான ஓட்டுகளை பெற முடியும் என்று காங்., நம்புகிறது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தப்ளிக் விழா: டில்லி விமான நிலையத்தில் 8 மலேசியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்! 960 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர்

இந்தியாவின் டில்லியில் நடைபெற்ற தப்ளிக் சமய விழாவில் கலந்து கொண்ட

மேலும்
img
மோடிக்கு பயங்கரவாதிகள் குறி

பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பு டிச.22ஆம் தேதி

மேலும்
img
இந்தியா இமாலய வெற்றி!

ரோகித், ராகுல் சதம்

மேலும்
img
கைலாசாவை அமைத்தே தீருவேன்... நித்தியானந்தா பேச்சு: 40 லட்சம் பேர் விண்ணத்துள்ளனர்

தம்முடைய கைலாசா நாட்டின் குடிமக்கள் ஆவதற்கு உலகெங்கிலுமிருந்து 40 லட்சம்

மேலும்
img
ஐஎஸ் அமைப்புக்கு தொடர்பு இல்லை மறைமுக சதியே காரணம் 

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img