img
img

யூனிதாரின் மாணவர் அறிமுக தினம்
புதன் 01 மே 2019 15:19:20

img

பெட்டாலிங்ஜெயா,

யூனிதார் மாணவர் அறிமுக தினத்தை முன்னிட்டு பல சிறப்பு நிகழ்வுகளை பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளதாக அதன் தலைமை இயக்குநர் பூவன் பாலச்சந்திரன் நேற்று கூறினார்.நாட்டின் முன்னிலை பல்கலைக்கழங்களில் ஒன் றான யூனிதார், தனது உலக தரம் வாய்ந்த கல்வி திட்டங் களை மாணவர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் முயற்சி களை அவ்வப்போது மேற்கொண்டு வருகிறது.

இதன் அடிப்படையில் அடிக்கடி மாணவர் அறிமுக தினத்தையும் ஏற்பாடு செய்து வருகிறது.இந்த மாணவர் அறிமுக தினத்தில் கலந்து கொள்பவர் கள் யூனிதாரின் கல்வி திட்டங்கள், தூர நோக்கு சிந்தனைகள்,  சலுகைகள் என அனைத்தும் மாணவர் களுக்கும் பெற்றோர்களுக்கும் எடுத்துக் கூறப்படுகிறது.

இதன்வழி மாணவர்கள் சிறந்ததொரு எதிர்கால முடிவை எடுப்பதற்கு அடித்தளமாக அமைகிறது என்று பூவன் கூறினார்.இவ்வாண்டுக்கான மாணவர் அறிமுக தினம் இன்று ஏப்ரல் 27ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பெட்டாலிங் ஜெயாவில் அமைந்துள்ள யூனிதார் கல்வி வளாகத்தில் நடைபெற்றவுள்ளது.

இளைஞர் விளை யாட்டுத்துறை அமைச்சர் சைட் சாடிக், பிரபல நகைச்சுவை கலைஞர் ஹரித் இஸ்கண் டார், அனைத் துலக கார்பந்தய வீரர் ஜஸ்மான் ஜபார், பாடகி ஷாரா சுஹாய்ரி உட்பட பல பிரமுகர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர். அதே வேளையில் உணவு சந்தை, பொழுதுபோக்கு நிகழ்வுகளு டன் அதிர்ஷ்டக் குலுக்கலும் நடைபெறவுள்ளது.

ஆகவே உலக தரம் வாய்ந்த பல்கலைக்கழகத்தில் இணைந்து உயர்கல்வியைக் பயில விரும்பும் மாணவர்கள் இந்த மாணவர் அறிமுக தினத்தில் கலந்து கொள்ளுமாறு பூவன் கேட்டுக் கொண்டார். 

Read More: Malaysia Nanban Tamil Daily on1.5.2019

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
தொழில் முனைவோர், தொழில் துறை வளர்ச்சிக்கான அத்தியாவசிய திறன்களுடன் மலேசிய இந்தியர்களுக்கு சித்தப்படுத்தும் NCER பயிற்சித் திட்டங்கள்.

மலேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் வலியுறுத்தி வரும்

மேலும்
img
பி.டி.பி.டி.என். வழங்கும் 15%, 12%, 10% - சலுகைக்கான விவரங்கள்

தேசிய உயர்கல்வி நிதியுதவிக் கழகமான பி.டி.பி.டி.என்., தங்கள் கடனை திரும்பச்

மேலும்
img
KEMPEN BELI BARANGAN MALAYSIA

வாருங்கள் ஆதரிப்போம், மற்றும் வாங்குவோம்

மேலும்
img
புரோஸ்டேட் புற்றுநோய் - முன்கூட்டியே கண்டறிவது மட்டுமே பாதுகாப்பு

புரோஸ்டேட் புற்றுநோய் - முன்கூட்டியே பதிந்து கொள்வீர்

மேலும்
img
மலேசியக் குடும்ப உன்னத கோட்பாடு அமைச்சர்களின் 100 நாள் அடைவு நிலை உயர்கல்வியமைச்சர் தரும் விளக்கம்

கே : 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதியன்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img