செவ்வாய் 28, செப்டம்பர் 2021  
img
img

ஆட்சியை தக்கவைக்க அதிமுக போட்ட அதிரடி ஸ்கெட்ச்...
திங்கள் 29 ஏப்ரல் 2019 14:21:55

img

சட்டமன்ற உறுப்பினர்கள் 234 பேரில், தற்போது 212 பேர் இருக்கின்றனர். 22 தொகுதிகள் காலியாக உள்ளது. இந்த 212ல், அதிமுக கூட்டணியில் 114 எம்.எல்.ஏ.க்கள் இருக்கின்றனர். திமுக கூட்டணியில் 97 பேர் இருக்கின்றனர்.தேர்தல் முடிவிற்கு பின்னும் அதிமுக ஆட்சி தொடரவேண்டுமெனில், அவர்கள் 118 இடங்கள் பெறவேண்டும் அதாவது 4 இடங்கள் வெல்லவேண்டும்.ஆனால் இந்த 4 இடங்களும் போதாது. 

ஏனெனில், கூட்டணியில் இருக்கும் தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோர் அதிமுகவிற்கு எதிரான மனநிலையில் உள்ளனர். அதேநேரம் அதிமுக விற்குள்ளேயே இருக்கும் கலைச்செல்வன்(விருதாச்சலம்), ரத்தினசபாபதி(அறந்தாங்கி), பிரபு(கள்ளக்குறிச்சி) ஆகிய எம்.எல்.ஏ.க்கள் வெளிப்படை யாகவே தினகரனை ஆதரிக்கின்றனர். ஒருவேளை இவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஆதரவளிக்கவில்லையென்றால் அதிமுகவின் எண்ணிக்கை 109 ஆக குறைந்துவிடும். இதனால்தான் 9 தொகுதிகளில் வெற்றி தேவை என்ற நிலையில் இருந்தது.

தற்போது, கலைச்செல்வன்(விருதாச்சலம்), ரத்தினசபாபதி(அறந்தாங்கி), பிரபு(கள்ளக்குறிச்சி) ஆகிய எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யுமாறு கோரி யுள்ளனர். இதன்மூலம் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 231 ஆக குறையும். அப்படியானால் அதன் பெரும்பான்மை அளவு தற்போது 116 இருந்தாலே போதும். தற்போது அதிமுகவிற்கு தேவையானது 8 உறுப்பினர்கள் மட்டுமே. 

தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்றும் வாய்ப்பு குறைவு மற்றும் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஒருவேளை இந்த மூவரும் ஆதரவளிக்காமல் விட்டுவிட்டால் எதிர்மறையாகிவிடும் என்ற அச்சம். இதனால்தான் இவர்களை முன்னரே தகுதிநீக்கம் செய்ய முடிவெடுத்திருக்கின்றனர்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தப்ளிக் விழா: டில்லி விமான நிலையத்தில் 8 மலேசியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்! 960 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர்

இந்தியாவின் டில்லியில் நடைபெற்ற தப்ளிக் சமய விழாவில் கலந்து கொண்ட

மேலும்
img
மோடிக்கு பயங்கரவாதிகள் குறி

பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பு டிச.22ஆம் தேதி

மேலும்
img
இந்தியா இமாலய வெற்றி!

ரோகித், ராகுல் சதம்

மேலும்
img
கைலாசாவை அமைத்தே தீருவேன்... நித்தியானந்தா பேச்சு: 40 லட்சம் பேர் விண்ணத்துள்ளனர்

தம்முடைய கைலாசா நாட்டின் குடிமக்கள் ஆவதற்கு உலகெங்கிலுமிருந்து 40 லட்சம்

மேலும்
img
ஐஎஸ் அமைப்புக்கு தொடர்பு இல்லை மறைமுக சதியே காரணம் 

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img