img
img

தேவாலயங்கள், ஓட்டல்களை குறிவைத்து 8 தொடர் வெடிகுண்டு தாக்குதல் 300 பேர் பலி
திங்கள் 22 ஏப்ரல் 2019 17:43:29

img

கொழும்பு,

இலங்கையில் அடுத்தடுத்து நிகழ்ந்த எட்டு தொடர் வெடிகுண்டு தாக்குதல்களில் இதுவரை 35 வெளிநாட்டினர் உட்பட 300 பேர் பலியான அதே சமயம் 600-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஈஸ்டர் கொண்டாட்டத்தின்போது நிகழ்ந்த இந்த பயங்கர சம்பவத்தால் இலங்கை நிலைகுலைந்து போயுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மூன்று தேவாலயங்கள், நான்கு ஐந்து நட்சத்திர ஓட்டல்கள், ஒரு குடியிருப்புப் பகுதியில் இக்கொடூர தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இலங்கை அதிர்ந்தது. மக்கள் பேரதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயம், காட்டுவாபிட்டியா தேவாலயம், பாட்டிகாலோ தேவாலயம், கொழும்பு நகரின் ஷங்ரிலா ஓட்டல், சின்னாமன் கிராண்ட் ஓட்டல், கிங்ஸ்புரி ஓட்டல்  உட்பட்ட இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. உலகம் முழுவதும் கிறிஸ்துவ மக்களால், இயேசுபிரான் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாள் நேற்று கொண்டாடப்பட்டது. ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு, இலங்கையின் தலைநகரான கொழும்பின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களில் நள்ளிரவில் திருப்பலிகள், ஆராதனைகள் நடைபெற்று வந்தன. சனிக்கிழமை இரவு 8 மணிக்கு ஆரம்பித்த சிறப்புப் பிரார்த்தனை நள்ளிரவு வரை நீடித்தது. இந்நிலையில், நேற்றுக் காலை 8.45 மணிக்கு தலைநகர் கொழும்புவில் உள்ள கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயத்தில் கிறிஸ்துவ மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த போது திடீரென குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்தது.குண்டு வெடித்ததில் தேவாலயத்தின் பெரும்பகுதி மேற்கூரைகள்  சேதமடைந்தன. 

பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த மக்கள், அலறியடித்துக் கொண்டு தப்பிக்க முயன்றனர். ஆனால், குண்டு வெடிப்பின் அதிர்ச்சியில் பலரும் அங்கேயே வீழ்ந்தனர்.  படுகாயத்துடன் இருந்தவர்கள் ஆபத்தான நிலையில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இதேபோல், கொழும்பு வில் 8 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு நடந்தது. ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி தேவாலயத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த நிலையில், குண்டுவெடிப்பு நடந்ததால் தேவாலயங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

இலங்கை முழுவதும் உள்ள தேவாலய பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.அடுத்தடுத்த குண்டுவெடிப்பால் இலங்கை தலைநகர் கொழும்புவில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இதுவரை எந்த ஒரு அமைப்பும் இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு பொறுப்பேற்காததால், உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில், சில வெளிநாட்டவர்களும் பாதிக்கப் பட்டிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. 

இலங்கையின் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உள்ளிட்ட தலைவர்கள் குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் பதற்றம் நீடிப்பதால், இலங்கை அதிபரும் பிரதமரும் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். மேலும், இந்த தாக்குதல் சம்பவம் குறித்து, கூட்டத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
img
பதவி விலகப் போவதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் எச்சரிக்கை 

முதலில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டியது

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img