புதன் 11, செப்டம்பர் 2024  
img
img

முதன்முதலாக சுலோவாகியா நாட்டின் அதிபராக பெண் தேர்வு 
செவ்வாய் 02 ஏப்ரல் 2019 14:05:09

img

பிராட்டிஷ்லாவா, 

முதன்முதலாக சுலோவாகியா நாட்டின் பெண் அதிபராக ஜூஜூனா கபுடோவா 58 சதவீத ஓட்டுகளை கைப்பற்றி வெற்றி பெற்றார். ஐரோப்பிய நாடுகளில் ஒன்று சுலோவாகியா. அங்கு அதிபர் தேர்தல் நடந்தது. இதில் ஊழலுக்கு எதிரான ஜூஜூனா கபுடோவா என்ற பெண் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஆளும் கட்சி வேட்பாளராக மாரோஸ் செப்கோவிக் நிறுத்தப்பட்டார். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.  

இந்த தேர்தல் நன்மைக்கும் தீமைக்குமான போராட்டம் என ஜூஜூனா கபுடோவா குறிப்பிட்டார். இந்த நிலையில் அதிபர் தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணி முடிக்கப்பட்டன. இதில் ஜூஜூனா கபுடோவா 58 சதவீத ஓட்டுகளை கைப்பற்றி வெற்றி பெற்றார். ஆளும் கட்சியின் வேட்பாளர் மாரோஸ் செப்கோவிக்கிற்கு 42 சதவீத ஓட்டுகள் விழுந்தன. சுலோவாகியா நாட்டில் பெண் ஒருவர் அதிபராக தேர்வு பெற்றிருப்பது இதுவே முதல் முறை. 

 

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img