வெள்ளி 17, செப்டம்பர் 2021  
img
img

கண்ணீரில் கோவா.. முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவு..
திங்கள் 18 மார்ச் 2019 17:31:15

img

பானஜி:

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. மிராமர் பகுதியில் இவரது உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெற்றது.நேற்று உடல்நலக்குறைவால் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார். அவருக்கு வயது 63. கணைய புற்றுநோய் காரணமாக மும்பை, டெல்லி நகரங்களில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் இந்த சிகிச்சை அவருக்கு பெரிய அளவில் பலன் அளிக்கவில்லை.

இதையடுத்து அவர் அமெரிக்கா சென்றார். கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று நாடு திரும்பினார்.தொடர்ந்து அலுவலக பணிகளை செய்து வந்த அவர் நேற்று உடலநலக்குறைவால் மரணம் அடைந்தார். உடல்நலக்குறைவிற்கு இடையில் இவர் முதல்வராக தன்னுடைய பணிகளை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது மறைவு காரணமாக தற்போது நாடு முழுக்க தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பத்து. இன்று காலை 9.30-10.30 மணி வரை மனோகர் பாரிகரின் உடல் கோவா பஞ்சிம் பகுதியில் பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்டது.

பாஜக அலுவலகத்தில் கட்சியினர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அதன்பின் காலா அகாடமி பகுதிக்கு மக்களின் அஞ்சலிக்கு எடுத்து செலுத்தப்பட்டது. அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். 4 மணி வரை மக்கள் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

பிரதமர் மோடி, அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பாஜக நிர்வாகிகள், ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொள்கிறார்கள். அரசியல் சாராத பிரபலங்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டனர். அதன்பின் காலா அகாடமி பகுதியில் இருந்து மிராமர் பகுதியில் மாலை 5 மணிக்கு இவரின் உடல் கொண்டு வரப்பட்டது. அங்கு இவரது உடலுக்கு இறுதி மரியாதைகள் செலுத்தப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெற்றது. அரசு மரியாதையுடன் இவரது இறுதிச்சடங்கு நடைபெற்றது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தப்ளிக் விழா: டில்லி விமான நிலையத்தில் 8 மலேசியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்! 960 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர்

இந்தியாவின் டில்லியில் நடைபெற்ற தப்ளிக் சமய விழாவில் கலந்து கொண்ட

மேலும்
img
மோடிக்கு பயங்கரவாதிகள் குறி

பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பு டிச.22ஆம் தேதி

மேலும்
img
இந்தியா இமாலய வெற்றி!

ரோகித், ராகுல் சதம்

மேலும்
img
கைலாசாவை அமைத்தே தீருவேன்... நித்தியானந்தா பேச்சு: 40 லட்சம் பேர் விண்ணத்துள்ளனர்

தம்முடைய கைலாசா நாட்டின் குடிமக்கள் ஆவதற்கு உலகெங்கிலுமிருந்து 40 லட்சம்

மேலும்
img
ஐஎஸ் அமைப்புக்கு தொடர்பு இல்லை மறைமுக சதியே காரணம் 

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img