செவ்வாய் 10, டிசம்பர் 2024  
img
img

அதிபர் வேட்பாளர் யார் மைத்திரி-மகிந்த மோதல் 
வியாழன் 14 மார்ச் 2019 13:14:01

img

கொழும்பு, 

மக்கள் விரும்பும் வேட்பாளர் யாரோ அவர்தான் எங்கள் அதிபர் வேட்பாளர் என்று முன்னாள் அமைச்சரும் மகிந்த ராஜபக்சேவின் சகோதரருமான பசில் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.  கூட்டணி அமைப்பது தொடர்பில் தாம் யாரிடமும் எந்த நிபந்தனையையும் முன்வைக்கவில்லை என தெரிவித்த அவர், அதிபர் தேர்தலில் கூட்டணி அமையும் வாய்ப்பில்லை என்பதே உண்மையாகும். 

அதிபர் வேட்பாளர் உரிய நேரத்தில் அறிவிக்கப்பட வேண்டும் என்பதால் கோத்தபாய முன்வந்து தனது கருத்தைச் சொன்னது போல போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் தங்களின் விண்ணப்பத்தை முன் வைக்கலாம் என்றார்.  இலங்கை ஓர் இறைமையுள்ள நாடு என்பதனால் அதனை தீர்மானிக்கும் அதிகாரம் மக்களிடம் இருக்க வேண்டும். அதை உலக நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும்.

இதையடுத்து அதிபர் வேட்பாளர் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கும் பொதுஜன பெரமுனவினருக்குமிடையில் கடும் உட்பூசல்கள் நிலவி வருவதாகக் கூறப்படுகிறது.எந்தவொரு சூழ்நிலையிலும் பொதுஜன வேட்பாளரல்லாத இன்னொருவரை அதிபர் வேட்பாளராகக் களமிறக்கப் போவ தில்லை என மகிந்த தரப்பினர் கூறி வருகிறனர். 

அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த  அதிபர் மைத்திரிபால சிறிசேனாவோ அல்லது வேறொருவரோ அல்லாமல் வெளியிலிருந்து புதிய வேட்பாளரைக் களமிறக்கக்கூடாது என்பதில் மைத்திரி தரப்பினர் உறுதியாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில்  ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் அதிரடியான சில மாற்றங்கள் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுவதாக பசில் கூறியுள்ளார். 

 

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img