வெள்ளி 17, செப்டம்பர் 2021  
img
img

படிக்கும் போதே காம வெறியனாக வலம் வந்த திருநாவுக்கரசு.. யார் இவர்?.. பரபர தகவல்கள்
புதன் 13 மார்ச் 2019 16:23:23

img

சென்னை:

பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தில் கைதாகியுள்ள திருநாவுக்கரசு படிக்கும்போதே கல்லூரியில் காதல் மன்னனாக வலம் வந்துள்ளதாக கூறப்படுகிறது.200-க்கும் மேற்பட்ட பெண்களை அநியாயமாக பலாத்காரம் செய்து அதை வீடியோவாக எடுத்து பெண்களை அவ்வப்போது மிரட்டிய விவகாரத்தில் திருநாவுக்கரசு உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. மற்ற 3 பேர் காதல் வலையில் சிக்க வைக்கும் பெண்களிடம் தனிமையான இடத்துக்கு வரக் கோரி அழைக்கும் பணியை திருநாவுக்கரசு செய்துவந்துள்ளார். இந்த மிருக கும்பலுக்கு தலைவன்தான் திருநாவுக்கரசு. 27 வயதான இவர் எம்பிஏ படித்துள்ளார். இவருக்கு வசதிக்கு குறைவில்லை. வட்டிக்கு விடும் தொழில் செய்து வருகிறார். சொகுசு கார், பண்ணை வீடு என எதற்கும் பஞ்சமில்லாதவர்.

ஆடம்பரமாக வாழ்ந்து வந்த இவர் கல்லூரியிலும் பல பெண்களுடன் பழகி அவர்களையும் சீரழித்துள்ளதாக கூறப்படுகிறது. படிக்கும் போதே காதல் மன்னனாக வலம் வந்த இவரது நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுவது, பார்ப்பதற்கு சினிமா நடிகர் போல் இருப்பது ஆகியவற்றை கொண்டு இளம்பெண்களை மயக்கி காதல் வலையில் சிக்க வைத்துள்ளார்.

அது போல் பேஸ்புக்கில் பெண்கள் பெயரில் ஃபேக் ஐடி உருவாக்கி அதன் மூலம் இளம் பெண்களுக்கு பிரெண்ட் ரிக்வஸ்ட் கொடுத்து பின்னர் நட்பாகியுள்ளனர். அந்த பெண்களிடம் பாலியல் சந்தேகங்களை எழுப்பும் போது அவர்களும் பெண்கள் என நினைத்து சில விஷயங்களை உளறிவிட்டால் போதும் அதை வைத்தே இந்த கும்பல் அவர்களை மிரட்டிபணிய வைத்துள்ளது.

எந்த பெண் யாருக்கு சிக்கினாலும் சரி. முதலில் அவர்களிடம் பேச்சு கொடுப்பது திருநாவுக்கரசுதான். தேன் போல் அவர்களிடம் பேசி மயக்குவதில் கில்லாடியான இவர் பாதி பேரை பேசியே வலையில் சிக்க வைத்துள்ளார் என பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தப்ளிக் விழா: டில்லி விமான நிலையத்தில் 8 மலேசியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்! 960 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர்

இந்தியாவின் டில்லியில் நடைபெற்ற தப்ளிக் சமய விழாவில் கலந்து கொண்ட

மேலும்
img
மோடிக்கு பயங்கரவாதிகள் குறி

பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பு டிச.22ஆம் தேதி

மேலும்
img
இந்தியா இமாலய வெற்றி!

ரோகித், ராகுல் சதம்

மேலும்
img
கைலாசாவை அமைத்தே தீருவேன்... நித்தியானந்தா பேச்சு: 40 லட்சம் பேர் விண்ணத்துள்ளனர்

தம்முடைய கைலாசா நாட்டின் குடிமக்கள் ஆவதற்கு உலகெங்கிலுமிருந்து 40 லட்சம்

மேலும்
img
ஐஎஸ் அமைப்புக்கு தொடர்பு இல்லை மறைமுக சதியே காரணம் 

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img