வெள்ளி 03, டிசம்பர் 2021  
img
img

வெளியேற்றம்: மீண்டும் முறுக்குகின்றது டெலோ!
வெள்ளி 08 மார்ச் 2019 13:48:03

img

யாழ்,

கூட்டமைப்பிலிருந்து டெலோ கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒருபிரிவினர் வெளியேறலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கூட்டமைப்பாகவே தற்போது செயல்பட்டு வருகிறதாக தமிழ் மக்கள் பார்க்கின்றனர். இந்தப் பயணத்தில் தொடர்ந்து நாங்கள் பயணிக்க முடியாது. எனவே கூட்டமைப்பு பயணிக்கின்ற பாதை சரி செய்யப்பட வேண்டுமென தாம் கோருவதாக தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி என்.சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.

சிங்களப் பெரும்பான்மைக் கட்சிகள்; பௌத்த சிங்கள ஆதிக்கச் சிந்தனையில் இருந்து விடுபடத் தயாரில்லை என்றால் நாங்கள் மீண்டும் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலே சுதந்திரத் தனித் தமிழீழக் கோரிக்கையை கையிலெடுப்பது பற்றி தீவிரமாகச் சிந்திக்க வேண்டி வரும். அதனை நாங்களோ எமது மக்களோ இப்போது சிந்திக்கா விட்டாலும் அதிகார அரசியல் வெறி கொண்டு அலைகின்ற பௌத்த சிங்களப் பேரினவாதிகளும் தலைவர்களும் அதைத் தீர்மானிப்பார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும் டெலோவை கூட்டமைப்பில் பிரதிநிதித்துவப்படுத்தும் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கோடீஸ்வரன் ஆகியோர் ரணிலின் ஆதரவு பெற்ற செல்லப்பிள்ளைகளாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
img
பதவி விலகப் போவதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் எச்சரிக்கை 

முதலில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டியது

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img