செவ்வாய் 07, டிசம்பர் 2021  
img
img

ஒவ்வொருவரும் 20 பேரை அழைத்து வந்து ஓட்டு போட வைத்தாலே ஆட்சியை பிடித்து விடுவோம்! உ.பி.களுக்கு கட்டளையிட்ட ஸ்டாலின்!!
சனி 16 பிப்ரவரி 2019 17:26:45

img

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை தொகுதியில் இருக்கும் பள்ளபட்டியில் நடந்த ஊராட்சி சபை கூட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொண்டார்.   அதன்பின் நிலக் கோட்டையில் நடந்த வாக்குச் சாவடி முகவர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொண்டார். 

இந்த பூத் கமிட்டி கூட்டத்திற்கு நிலக்கோட்டை தொகுதியில் உள்ள வத்தலக்குண்டு நிலக்கோட்டை ஒன்றியத்திலிருந்து ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பூத் கமிட்டி ஏஜெண்டுகளான கழக உடன் பிறப்புகள் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும் கழக துணை பொதுச் செயலாளருமான ஐ.பெரியசாமி தலைமை தாங்கினார்.    அதுபோல் தொகுதி பொறுப்பாளர் சாமிநாதன் மேற்கு சென்னை மாவட்ட செயலாளரும் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினருமான சக்கரபாணி கிழக்கு மாவட்ட செயலாளர் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி. செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் பேசிய ஐ. பி. செந்தில்குமாரோ... நிலக்கோட்டை தொகுதியில் உள்ள வத்தலக்குண்டு, நிலக்கோட்டை ஆகிய 2 ஒன்றியங்களில் 5,500 பூத் கமிட்டி அமைத்து உள்ளோம். அதுபோல் ஒவ்வொரு பூத்துக்கும் தகவல் தொழில் நுட்ப அணியும் நியமித்திருக்கிறோம். தலைவர் உத்தரவுக்கு பணிந்து தேர்தல் பணிகளை முழுமையாக செயல்பட தயாராக இருக்கிறோம். இந்த தேர்தல் பணியில் எங்களுடைய உயிர் அணுவை கூட  இழக்க தயாராக இருக்கிறோம் என்று கூறினார்.

 dஅதன் பின் பேசிய கழகத் துணை பொதுச் செயலாளரான ஐ பெரியசாமி..... தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கு பல திட்டங்களை தலைவர் கலைஞர் தான் கொண்டு வந்தார். சுதந்திரம் அடைந்த பிறகு உப்புத் தண்ணியை குடித்த மக்களுக்கு வைகை பேரனை மூலம் தலைவர்தான் நல்ல தண்ணீரை கொண்டு வந்து கொடுத்தார். அந்த நன்றியை  நிலக்கோட்டை தொகுதி மக்கள் நினைத்துப் பார்க்கவேண்டும் என்று கூறினார்.

இறுதியாக பூத் கமிட்டி கூட்டத்தில் பேசிய மு.க. ஸ்டாலினோ... தமிழகத்திற்கு பாராளுமன்ற தேர்தல் வரு கிறதா அல்லது மீண்டும் 234 தொகுதி சட்டமன்ற தேர்தல் வர உள்ளதா என்பது தெரியவில்லை. மைனாரிட்டி யாக நடந்துவருகிறது. உடனடியாக இந்த ஆட்சியை அகற்ற வேண்டிய சூழல் உள்ளது. பொதுமக்களை அதிகம் எதிர்பார்த்து வருகிறார்கள்.

இந்த வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்திற்கு 5,500 பேர் வரைக்கும் வந்து இருக்கிறார்கள்.  ஒரு பூத்துக்கு 21 பேர் என முகவர்கள் நியமித்திருக்கிறோம். இதில் ஒருவர் 20 பேரை அழைத்து வந்து ஓட்டு போட வைத்தாலே நாம் ஆட்சியை பிடித்து விடுவோம்.  இந்த தேர்தல் பணியில் ஈடுபடும் உங்களை தேர்தலோடு விட்டுவிடுவேன் என்று நினைத்து விடாதீர்கள். உங்களுக்கு  அனைத்து அங்கீகாரமும்  கிடைக்கும் அதற்கு நான் பொறுப்பு என்று கூறினார். 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தப்ளிக் விழா: டில்லி விமான நிலையத்தில் 8 மலேசியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்! 960 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர்

இந்தியாவின் டில்லியில் நடைபெற்ற தப்ளிக் சமய விழாவில் கலந்து கொண்ட

மேலும்
img
மோடிக்கு பயங்கரவாதிகள் குறி

பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பு டிச.22ஆம் தேதி

மேலும்
img
இந்தியா இமாலய வெற்றி!

ரோகித், ராகுல் சதம்

மேலும்
img
கைலாசாவை அமைத்தே தீருவேன்... நித்தியானந்தா பேச்சு: 40 லட்சம் பேர் விண்ணத்துள்ளனர்

தம்முடைய கைலாசா நாட்டின் குடிமக்கள் ஆவதற்கு உலகெங்கிலுமிருந்து 40 லட்சம்

மேலும்
img
ஐஎஸ் அமைப்புக்கு தொடர்பு இல்லை மறைமுக சதியே காரணம் 

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img