செவ்வாய் 28, செப்டம்பர் 2021  
img
img

கொடநாடு சம்பவங்கள் ஹாலிவுட் திரில்லர் படம் போல் உள்ளது! ஜி.ராமகிருஷ்னண்
சனி 26 ஜனவரி 2019 16:47:09

img

திண்டுக்கல் வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்  பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசும்போது,   தமிழகத்தின் சார்பாக நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு அரசியல் நோக்கம் கொண்டது.  2015ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. இரண்டரை லட்சம் கோடிக்கு மூலதனம் ஒப்பந்தம் கிடைத்து விட்டதாக மாநாட்டில் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் வந்தது 68,000 கோடி தான்.  இது போல தான் இதுவும்.  இப்போது மூன்றரை லட்சம் கோடி வரும் என்று கூறப்ப டுவதை எப்படி நம்பமுடியும்.  பாராளுமன்ற தேர்தலை ஒட்டி ஒரு அரசியல் நோக்கத்தோடு இந்த மாநாடு நடத்தப்பட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தலில் அகில இந்திய அளவில் எதிர்கட்சிகளுக்கு இடையில் ஒரே மாதிரியான அணி உருவாக வாய்ப்பில்லை ஆனால் பாஜகவை தோற்கடிப்பதற்காக பாஜகவிற்கு எதிரான வாக்குகளை ஒருங்கிணைக்கக் கூடிய அடிப்படையில் மாநில அளவில் அணி அமைய வாய்ப்புள்ளது.   

கோடநாடு எஸ்டேட்டில் காவலர்கள் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கார் விபத்தில் மரணம் போன்ற சம்பவங்கள் ஹாலிவுட் திரில்லர் படம் போன்று உள்ளது.  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்புள்ளதாக கூறப்படுகிறது.   எனவே அவர் பதவி விலக வேண்டும்.   நீதி மன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடத்தப்படவேண்டும் என்று கூறினார் பேட்டியின்போது முன்னாள் மாவட்ட செயலாளர் பாண்டி உள்பட பொருப்பாளர்கள் சிலர் உடனிருந்தனர்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தப்ளிக் விழா: டில்லி விமான நிலையத்தில் 8 மலேசியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்! 960 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர்

இந்தியாவின் டில்லியில் நடைபெற்ற தப்ளிக் சமய விழாவில் கலந்து கொண்ட

மேலும்
img
மோடிக்கு பயங்கரவாதிகள் குறி

பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பு டிச.22ஆம் தேதி

மேலும்
img
இந்தியா இமாலய வெற்றி!

ரோகித், ராகுல் சதம்

மேலும்
img
கைலாசாவை அமைத்தே தீருவேன்... நித்தியானந்தா பேச்சு: 40 லட்சம் பேர் விண்ணத்துள்ளனர்

தம்முடைய கைலாசா நாட்டின் குடிமக்கள் ஆவதற்கு உலகெங்கிலுமிருந்து 40 லட்சம்

மேலும்
img
ஐஎஸ் அமைப்புக்கு தொடர்பு இல்லை மறைமுக சதியே காரணம் 

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img