செவ்வாய் 10, டிசம்பர் 2024  
img
img

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பலி
வெள்ளி 21 அக்டோபர் 2016 13:45:00

img

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மோட்டார் சைக்கிள் விபத்தில் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் யாழ்.கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்றுள்ளது. அளவெட்டி கந்தரோடை பகுதியை சேர்ந்த சுகந்தராசா சுலக்சன் (வயது 24) மற்றும் 155 ஆம் கட்டை கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த நடராசாகஜன் (வயது 23) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.குறித்த இருவரும் யாழ்.பல்கலைக்கழக கலைப்பீடத்தில் கல்வி கற்று வருகின்றார்கள். கந்தரோடையில் இருந்து பல்கலைக்கழக விடுதிக்கு, அதிவேகமாக வந்து கொண்டிருந்த வேளையில் குளப்பிட்டி பகுதியில் உள்ள வீதியில் இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் மதில் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இதேவேளை, இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் பொதுமக்கள் இது தொடர்பாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின் றது. மேலும், உயிரிழந்த இருவரின் சடலங்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேதபரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img