செவ்வாய் 12, நவம்பர் 2024  
img
img

கனா விமர்சனம்
சனி 22 டிசம்பர் 2018 17:22:42

img
 
சமுதாய சிந்தனையுடன் படம் எடுத்திருக்கும் இயக்குநர் அருண்ராஜா காமராசுவை முதலில் பாராட்ட வேண்டும். கிரிக்கெட் விளையாட்டையும் விவ சாயத்தையும் வைத்து இந்தப் படத்தின் மூலம் நாட்டு மக்களுக்கு ஒரு பாடம் நடத்தியிருக்கிறார் இயக்குநர். விவசாய குடும்பத்தில் பிறந்த பெண் ஒருத்தி இந்திய நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விதமாக படத்தை நகரத்திருக்கும் விதம் அபாரம். 
 
காவிரிக் கரையோரம் விவசாயம் செய்யும் விவசாயி சத்தியராஜ். அவரது மகள் ஐஸ்வரியா ராஜேஷ். சத்தியராஜிற்கு விவசாயம் ஒரு கண் என்றால் மறு கண் கிரிக்கெட். சிறுவயது முதலே தனது மகளுடன் சேர்ந்து தொலைக்காட்சியில் கிரிக்கெட் விளையாட்டை கண்டு ரசிக்கிறார். ஒருமுறை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோற்றுவிடுகிறது. இந்தியா தோற்றுவிட்டதே என்று சத்தியராஜ் அழுகிறார்.
 
இதைப்பார்த்த சிறுமியாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், "நான் கிரிக்கெட் விளையாடி இந்தியாவை வெற்றி பெற வைப்பேன், அதைப்பார்த்து எனது அப்பா சிரிக்க  வேண்டும் என்று சபதம் எடுக்கிறார். அதனால் ஆண்கள் படிக்கும் பள்ளிக்கூடத்திற்கு சென்று அங்கு கிரிக்கெட் விளையாடும் சிறுவர்க ளோடு சேர்ந்து ஐஸ்வர்யாவும் கிரிக்கெட் விளையாடுகிறார். படிப்பில் கவனம் செலுத்துவது இல்லை. கிரிக்கெட்டில் இந்தியாவை வெற்றி பெறச்செய்து அப்பாவை மகிழ்ச்சியில் ஆழ்த்த வேண்டும் என்று சிறுவயதில் எடுத்த சபதம் ஒன்றுதான் அவரது மனதில் ஆழமாக பதிந்திருக்கிறது. பெரியவளானதும் ஆண்களோடு கிரிக்கெட் விளையாடுவதை அவரது அம்மா எதிர்ககிறார். ஆனால் அப்பா சத்தியராஜ் ஆதரிக்கிறார். பல எதிர்ப்புகளுக்கிடையே கிரிக்கெட் வீராங்கனையாக மாறுகிறார் ஐஸ்வரியா. 
 
எந்தத்துறையை எடுத்தாலும் அதில் எதிர்ப்புகள் இருக்கும் என்பதையும் அதை சமாளித்துத்தான் முன்னேற வேண்டும் என்பதையும் அழகாக சொல்லி யிருக்கிறார். சவால்களை சமாளிக்க ஆண்களைவிட பெண்கள்தான் அதிக எதிர்நீச்சல் போட வேண்டும். அவமானங்களை சந்திக்க வேண்டும். அதை யெல்லாம் தாண்டிதான் ஒரு பெண் தனது இலட்சியத்தை அடைய முடியும் என்பதை கனா திரைப்படம் கற்றுத் தருகிறது. பல கஷ்டங்களையும் எதிர்ப்பு களையும் சமாளித்து இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்கிறார் ஐஸ்வர்யா. 
 
கிரிக்கெட், விவசாயம் என்ற இரண்டு தண்டவாளத்தின் மீது பயணிக்கிறது "கனா" ரெயில். 
 
காவிரியில் தண்ணீர் திறந்துவிடாததால் டெல்டா பகுதி நெல் பயிர்கள் வாடி மடிங்கின்றது. இதனால் விவசாயம் இல்லாமல் உணவுக்கு விவசாயிகள் தற்கொலை செய்கிறார்கள். கடன் கொடுத்த வங்கி மேலாளர் கடன் கேட்டு வார்த்தைகளால் விவசாயிகளை மானத்தை கொலை செய்கிறார். இந்த பயிர் கருகும் நிலையை கண்டு சத்தியராஜ் கண்ணீர் சிந்துகிறார். விவசாயக் கடனுக்காக வீட்டை ஜப்தியும் செய்கிறார்கள்.
 
தாங்கமுடியாத வறுமையில் சத்தியராஜ் வாழ்கிறார். விவசாயிகளின் வறுமை நிலை ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியுடன் போதும் இந்திய வீராங்கனை ஐஸ்வரியாவுக்கு தெரியவருகிறது. கதறி அழும் ஐஸ்வரியா நான் விளையாட முடியாது என்று கூறுகிறார். அவரை சமாதானப்படுத்தும் பயிற்சியாளர் சிவகார்த்திகேயன் ஐஸ்வரியாவை சமாதானப்படுத்தி விளையாட சம்மதிக்க வைக்கும் கட்டம் உணர்ச்சிப்பூர்வமாக உள்ளது. "ஜெயிக்கிறேன்னு சொன்னா கேட்கமாட்டாங்க... ஜெயிச்சவன் சொன்னாதான் கேட்பாங்க" என்று சொன்னதும் விளையாடி இந்தியாவை வெற்றிபெற செய்கிறார் ஐஸ்வரியா. ஜெயித்ததும் இந்தியாவின் ஆட்சியாளர்களைப் பார்த்து கேட்கிறார் "இந்திய கிரிக்கெட்டை காப்பாற்ற நாங்க 11 பேர் இருக்கோம்... ஆனா இந்தியாவில் விவசாயத்த காப்பாற்ற யார் இருக்கா", இந்த கட்டத்தில் ஆட்சியாளர்களை தலைகுனிய வைத்துவிட்டார் இயக்குநர்.
 
கனா ஒவ்வொரு இந்தியனின் தூக்கத்திலும் வரவேண்டும்.
பின்செல்

கோலிவுட் செய்திகள்

img
மெஹந்தி சர்க்கஸ்

ஸ்வேதாவின் மகள் தனது தாயின் பழைய

மேலும்
img
சீதக்காதி  விமர்சனம்

சினிமாவுக்கு இலக்கணம் தேவையில்லை

மேலும்
img
கனா விமர்சனம்

கனா ஒவ்வொரு இந்தியனின் தூக்கத்திலும்

மேலும்
img
1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் "ஐயங்கரன்" டீசர்

படங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி

மேலும்
img
பில்லா பாண்டி விமர்சனம்

வெளிப்படுத்தி மடைதிறந்த வெள்ளம்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img