வெள்ளி 17, செப்டம்பர் 2021  
img
img

“இந்த குடும்பம் இனி என் குடும்பம்”- உயிரிழந்த ரசிகர் வீட்டில் கண் கலங்கிய சூர்யா...
வியாழன் 29 நவம்பர் 2018 12:39:17

img

நடிகர் சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே மற்றும் கே.வி. ஆனந்துடன் ஒரு படத்தில் நடித்துகொண்டிருக்கிறார். சமீபமாக இவர் எந்த ஒரு பொதுமேடைகளிலும் கலந்து கொள்ளாமல் பிஸியாக நடித்து வருகிறார்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் மணிகண்டன் (வயது 35), இவர் டீக்கடை ஒன்றில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். மேலும்  சூர்யா ரசிகர் மன்ற த்தின் சேலம் கிழக்கு மாவட்ட தலைவராகவும் உள்ளார். கடந்த 13ஆம் தேதி இவர் நுரையீரலில் பாதிப்பு காரணமாக மரணம் அடைந்தார். 

இதை கேள்விப்பட்ட நடிகர் சூர்யா சேலத்திலுள்ள மணிகண்டனின் வீட்டிற்கு தனியாக காரில் சென்றார். இரவு 10 மணிபோல் யாருக்கும் தெரியாமல் ரகசி யமாக அவரது வீட்டுக்கு சென்று மணிகண்டனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். மணிகண்டனின் மனைவியிடம் மகளின் படிப்பு செலவை ஏற்றுக்கொள்வதாகவும் வாக்குறுதி கொடுத்துள்ளார். இந்த குடும்பம் இனி என்னுடைய குடும்பம், அனைத்து தேவைகளையும் நான் உங்களுக்கு செய்து வைக்கிறேன் என்று ஆறுதல் கூறினார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தப்ளிக் விழா: டில்லி விமான நிலையத்தில் 8 மலேசியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்! 960 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர்

இந்தியாவின் டில்லியில் நடைபெற்ற தப்ளிக் சமய விழாவில் கலந்து கொண்ட

மேலும்
img
மோடிக்கு பயங்கரவாதிகள் குறி

பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பு டிச.22ஆம் தேதி

மேலும்
img
இந்தியா இமாலய வெற்றி!

ரோகித், ராகுல் சதம்

மேலும்
img
கைலாசாவை அமைத்தே தீருவேன்... நித்தியானந்தா பேச்சு: 40 லட்சம் பேர் விண்ணத்துள்ளனர்

தம்முடைய கைலாசா நாட்டின் குடிமக்கள் ஆவதற்கு உலகெங்கிலுமிருந்து 40 லட்சம்

மேலும்
img
ஐஎஸ் அமைப்புக்கு தொடர்பு இல்லை மறைமுக சதியே காரணம் 

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img