img
img

ஒரு மாத சம்பளத்தை கலெக்டரிடம் வழங்குவேன்! தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ. அறிவிப்பு!
திங்கள் 19 நவம்பர் 2018 17:35:01

img

நாகப்பட்டினத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை எம்.எல்.ஏ.வுமான மு.தமிமுன் அன்சாரி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர், மஜக தலைமை நிர்வாகக்குழுவின் ஆலோசனைப்படி தனது ஒரு மாத எம்.எல்.ஏ. சம்பளத்தை கஜா புயல் நிவாரண நிதிக்கு நாகை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வழங்க இருப்பதாக கூறினார்.

நிவாரணப் பணிகள் குறித்த நடவடிக்கைகளுக்காக, அரசியல் வேறுபாடுகள், பேதங்களை கடந்து எல்லோரும் இணைந்து பணியாற்ற முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.மஜக பேரிடர் மீட்புக் குழு சார்பில் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 1000-த்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், இதுவரை 20 ஆயிரம் பேருக்கு உணவு, பிஸ்கட், பால் பவுடர், மினரல் வாட்டர் என வினியோகம் செய்தி ருப்பதாகவும், 15 ஆயிரம்  மெழுகுவர்த்திகள் வழங்கப்பட்டிருப்பதாகவும், ஜெனரேட்டர் மூலம் பல இடங்களில்  மின்சார சேவை அளிக்கப்படுவதாகவும் கூறினார்.

பேட்டியின் போது மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை முபாரக், ஐ.டி. விங் மாவட்ட செயலாளர் சுல்தான், மாவட்ட விவசாய அணி செயலாளர் ஜலாலுதீன், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் பாரக்,  மஜக மாவட்ட பி.ஆர்.ஓ. தமீஜுதீன், சம்பத், முரளி, சேக் அலி ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
img
கேரளாவில் புது காச்சல்

கோழிக்கோடு, ஏப். 30- கோழிக்கோடு மாவட்டத்தில் பாக்டீரியாவால் மீண்டும் 2

மேலும்
img
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம், ரங்கா ரங்கா கோஷத்துடன் கோலாகலமாக நடைபெற்றது.

திருச்சி, ஏப். 30- ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம், ரங்கா

மேலும்
img
தப்ளிக் விழா: டில்லி விமான நிலையத்தில் 8 மலேசியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்! 960 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர்

இந்தியாவின் டில்லியில் நடைபெற்ற தப்ளிக் சமய விழாவில் கலந்து கொண்ட

மேலும்
img
மோடிக்கு பயங்கரவாதிகள் குறி

பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பு டிச.22ஆம் தேதி

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img