செவ்வாய் 10, டிசம்பர் 2024  
img
img

யாழை எச்சரிக்கும் மர்ம கும்பல்!!
செவ்வாய் 18 அக்டோபர் 2016 12:50:53

img

நாட்டில் தற்போது திருப்புமுனைகள் பல ஏற்பட்டு வருகின்றது. எவ்வாறாயினும் நாட்டில் இனவாதமானது வெளிப்படையாக தூண்டப்பட்டு வருவதாக தென்னனிலங்கை புத்தி ஜீவிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பெரும்பான்மை இனத்தவர் மூலம் வெளிப்படையாக இனவாதங்கள் பரப்பப்பட்டாலும் அவை திசை திருப் படுகின்றது மாற்றப்படுகின்றது. அவை சிறுபான்மை இனத்தவர் மீது திணிக்கப்பட்டு வருகின்றது என்பது தற்போது ஆதாரப்பூர்வமாக்கப்பட்டு வருகின்றது. ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்னர் நாட்டில் சிங்கலே என்ற அமைப்பு உருவாகி இலங்கையின் மூலைமுடுக் கெங்கும் படுவேகமாக பரவ ஆரம்பித்தது. அதன் பின்னர் அது நல்லாட்சி மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் குறைக்கப்பட்டது பின்னர் தடுக்கப்பட்டது. இதேவேளை இந்த வருடம் பெப்ரவரி மாதம் தேசியக் கொடியாக சிங்கலே கொடி பிரகடனப்படுத்தும் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் கூறப்பட்டு இனவாதம் பரப்பப்படுவதாகவும் கூறி சிங்கலே அமைப்பின் உறுப்பினர்கள் சிலர் கைது செய்யப்பட்டு பெருமளவிலான சிங்கலே கொடிகளையும் பொலிஸார் கைப்பற்றினர். ஆனாலும் இவை வெளிப்படையாக தெரிவிக்கப்பட வில்லை. அதே போன்று கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பிலும் கூறப்படவில்லை அவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆனாலும் கைப்பற்றப்பட்ட கொடிகள் மட்டும் திருப்பிக்கொடுக்கப்படாமல் இருந்தன. இங்கு அவர்கள் கைது செய்யப்பட்டது தேசியக்கொடிக்கு அவதூறு செய்தமை மற்றும் தேசவிரோத குற்றத்திற்காகவே என்பதும் சுட்டிக்காட்டப்படத்தக்கது. பின்னர் நேற்று முன்தினம் குறித்த கொடிகள் அனைத்தும் திருப்பிக்கொடுக்கப்பட்டுள்ளதோடு குறித்த குற்றச்சாட்டுகளும் புறக்கணிக்கப்பட்டுள்ளன.அத்துடன் சிங்கலே கொடிகளானது இனவாதத்தினை பரப்பும் செயல் அல்ல எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிங்கலே அமைப்பு நாட்டில் இனவாதத்தை பரப்பி வருவதாக அரசு எடுத்த முடிவினாலேயே அந்த அமைப்பு நாட்டில் பரப்பப்படுவதனை நிருத்தப்பட்டது என்பது இங்கு சுட்டிக்காட்டப்படத்தக்கது. தற்போது அது இனவாத செயற்பாடு அல்ல என பொலிஸார் அறிவித்துள்ளதோடு குற்றமற்ற செயல் எனவும் அறிவித்துள்ளமை வியக்கத்தக்கது.இங்கு அரசின் கருத்தை பொலிஸார் நிராகரித்தது எவ்வாறு என்ற சந்தேகம் ஏற்படுகின்றது. அத்தோடு ஏன் கொடிகளை மீண்டும் திருப்பிக்கொடுக்க வேண்டும் என்ற சந்தேகமும் ஏற்படுகின்றது.இதேவேளை தமிழர்கள் இலங்கையை அல்லது வடக்கை சொந்தம் கொண்டாட முடியாது பெரும்பான்மை இனத்தவரான சிங்களவர்களுக்கே வடக்கு சொந்தம். இது கலகொட அத்தே ஞானசார தேரர் பகிரங்கமாக தெரிவித்த கருத்து. அத்தோடு சிங்லே அமைப்பினர் வெளிப்படையாக தற்போது வடக்கு சிங்கள மக்களுக்கே சொந்தம் என்ற கருத்தையும் வலியுருத்தி வருகின்றமை இனவாதக்கருத்தாக எவராலும் நோக்கப்படுவதில்லை.தற்போது பல்வேறு வகையான மாற்றங்கள் இடம்பெற்று கொண்டு வருகின்றது. முன்பு இனவாதம், தேசவிரோதம் என கருதப்பட்டமை தற்போது வெளிப்படையாக குற்றமற்ற கருத்துகளாக கூறப்படுகின்றது. அப்படியாயின் அரசு தற்போது இதற்கு அனுமதி கொடுத்துள்ளதா? அண்மையில் வவுனியா போராட்டத்தின் போது சிங்கலே அமைப்பினர் சிங்களவரின் உரிமைக்காக அடுத்து யாழ்ப்பாணத்திற்கும் சென்று போராடுவோம் எனவும் அவர் பகிரங்கமாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.அவர் குறிப்பிட்டது போன்று யாழ்ப்பாணத்திற்கு சென்று போராட்டம் செய்ய வேண்டுமாயின் சிங்கலேவிற்கு விடுக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படவேண்டும் இல்லாவிடின் அது குற்றமாக்கப்படும் என்பதே உண்மை. அவ்வாறே தமிழர்கள் வாழும் பிரதேசத்திற்கு சிங்கள கலாச்சாரத்தை புகுத்த முயலும் செயற்பாடு பாரதூரமான விளைவினை ஏற்படுத்தும் அண்மையில் யாழ். பல்கலைக்களகத்தில் சிறியதொரு விவகாரம் பாரிய அளவு பதற்றத்தையும் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலும் இவ்வாறான செயற்பாடு காரணமானவே. தற்போது சிங்கலே அமைப்பினர் தாம் கூறியது போல யாழ் நகரிற்கு செல்வார்களாயின் பாரதூரமான விளைவு ஏற்படும் அது ஆட்சி மாற்றம். தமிழர்கள் மீண்டும் கொன்று குவிக்கும் திட்டம், உயிர் பலி போன்றவை ஏற்படும் சாத்தியக்கூறு உண்டு.அதற்காக ஆரம்பகட்ட நீர் ஊற்றல் செயற்பாடே தற்போது சிங்கலே இனவாதம் அல்ல என கூறப்பட்டுள்ள கருத்து எனவும் தென்னனிலங்கை புத்தி ஜீவிகள் தெரிவத்து வருகின்றனர். இதேவேளை சிங்கலே அமைப்பிற்கு மஹிந்த தரப்பு ஆதரவு தெரிவித்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள அமைதி சூழலை நாட்டு மக்கள் அனைவரும் விரும்புகின்றனர் குறிப்பாக சிங்கள இன சகோதரர்களும் ஒற்றுமையையான அமைதியான நாட்டினையே எதிர்ப்பார்க்கின்றனர். இத்தகைய சூழலில் பதற்ற நிலைகளை தோற்றுவித்து நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் ஒரு சில இனவாதிகளின் செயற்பாடுகளினால் ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் அவப்பெயர் ஏற்படுவது வேதனைக்குரிய விடயமே.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img