இந்த வருடத்தின் சக்கி வாய்ந்த புயலாகக் கருதப்படும் மங்குட் புயல் பிலிப்பைன்ஸைத் தாக்கியதில் இதுவரை 59 பேர் பலியாகியுள்ளனர். ஆயிரக்க ணக்கான மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி மாற்று இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பிலிப்பைன்ஸின் பக்காயோ இடத்தில் மங்குட் புயல் ஞாயிற்றுக்கிழமை கரையைக் கடந்தது.
இதனால் மணிக்கு 300 கிலோமீட்டர் அளவில் சூறைக்காற்று வீசியது. இதன் காரணமாக மங்குட் புயல் பிலிப்பைன்ஸை ஒரு புறட்டு புறட்டிப்போட்டு ள்ளது. மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கை இழந்து தவித்து வருகின்றனர். ஆயிரக்கணக்கானோர் தங்களின் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிலிப்பைன்ஸில் கரையைக் கடந்த மங்குட் புயல் தற்போது சீனாவின் தென்பகுதி மற்றும் ஹாங்காங்கில் தனது தாக்கத்தைக் காட்டி வருகிறது. இதில் சீனாவில் இதுவரை 4 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் 7 நகரங்களில் சுமார் 5 லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஷென்ஜென் விமான நிலையம் மூடப்பட்டது. குவாங்சோவில் விமான சேவைகள் இன்று வரை ரத்து செய்யப்பட்டு உள்ளன. ஹைனான் மாகாணத்தில் 800 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல்களை தெரிவிக்கின்றன. 2018ஆம் ஆண்டின் சக்தி வாய்ந்த புயலாக மங்குட் புயலை வானிலை விஞ்ஞானிகள் தெரிவித்ததை அடுத்து, இதனை ’மிக அதிக சக்தி வாய்ந்த’ புயல் எச்சரிக்கையாக சீனா அறிவித்துள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்