செவ்வாய் 28, செப்டம்பர் 2021  
img
img

வெள்ளத்தை அடுத்து கேரளாவை குறிவைக்கும் எலிக்காய்ச்சல்...
சனி 01 செப்டம்பர் 2018 17:15:57

img

கேரள மாநிலத்தில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெள்ளம் ஏற்பட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கின. கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தினால் இதுவரை 483 பேர் இறந்துள்ளதாக பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும் மூன்றாம் கட்ட நிவாரண பணிகள் தொடர்ந்து தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இந்த மாபெரும் பேரிருடலிருந்து கேரளா மீண்டும் வரும் தருணத்தில் தற்போது அங்கு தொற்றுநோய்கள் பரவி வருகின்றன. அதிலும் குறிப்பாக எலிக்காய்ச்சல் பரவி இதுவரை ஐந்து நாட்களில் 23 பேர் இறந்தள்ளதாகவும் 150 மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் இதனால் மக்கள் எச்சரிக்கை மற்றும் சுகாதார வழிகளை பின்பற்றி காத்துக்கொள்ளமாறு கேரள சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்த அறிவிப்பில், கோழிக்கோடு, பாலக்காடு, வயநாடு, திருச்சூர், திருவனந்தபுரம் மாவட்டங்களில் அடுத்தடுத்து எலிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். பல நாட்களாக தேங்கியுள்ள தண்ணீரில் விலங்குகள் செத்து மிதப்பதால் எலிக்காய்ச்சல், மலேரியா, டெங்குபோன்ற தொற்று நோய்கள் பரவி வருகிறது அதிலும் குறிப்பாக இந்த எலிக்காய்ச்சல் நீரின் மூலமாகவே பரவுகிறது எனவே மக்கள் நீரை கொதிக்கவைத்து அருந்தும்படியும் கேட்டுக்கொண்டுள்ளது கேரள சுகாதாரத்துறை.

 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தப்ளிக் விழா: டில்லி விமான நிலையத்தில் 8 மலேசியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்! 960 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர்

இந்தியாவின் டில்லியில் நடைபெற்ற தப்ளிக் சமய விழாவில் கலந்து கொண்ட

மேலும்
img
மோடிக்கு பயங்கரவாதிகள் குறி

பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பு டிச.22ஆம் தேதி

மேலும்
img
இந்தியா இமாலய வெற்றி!

ரோகித், ராகுல் சதம்

மேலும்
img
கைலாசாவை அமைத்தே தீருவேன்... நித்தியானந்தா பேச்சு: 40 லட்சம் பேர் விண்ணத்துள்ளனர்

தம்முடைய கைலாசா நாட்டின் குடிமக்கள் ஆவதற்கு உலகெங்கிலுமிருந்து 40 லட்சம்

மேலும்
img
ஐஎஸ் அமைப்புக்கு தொடர்பு இல்லை மறைமுக சதியே காரணம் 

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img