செவ்வாய் 28, செப்டம்பர் 2021  
img
img

வரலாறு தெரியாமல் பேசுகிறார் ரஜினிகாந்த்: கடம்பூர் ராஜூ
புதன் 15 ஆகஸ்ட் 2018 15:03:57

img

வரலாறு தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். 

கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போதுஅவர், அ.தி.மு.க. என்ற மகத்தான இயக்கத்தை எம்.ஜி.ஆர்.தொடங்கினார். அப்போது தமிழகத்தில் நடிகர் ரஜினிகாந்த் இல்லை. அவர் அ.தி.மு.க. வரலாறு தெரியாமல் பேசுகிறார். அவர் அ.தி.மு.க.வின் வரலாற்றினை தெரிந்து கொண்டு பேச வேண்டும். மறைந்த தி.மு.க. தலைவரின் உடல், ராஜாஜி அரங்கில் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. மேலும் ஒரு நாள் அரசு பொது விடுமுறை வழங்கி, ஒரு வாரம் அரசு நிகழ்ச்சிகளை ஒத்தி வைத்து, துக்கம் அனுசரித்து உள்ளது.

இதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க.வினர் நன்றி கூற வேண்டும். தி.மு.க.வின் செயற்குழு கூட்டத்திலும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து இருக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை மும்முரமாக நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்ட த்தில் தற்போது 11 ஆயிரம் பேர் அ.தி.மு.க.வில் புதிதாக இணைந்துள்ளனர் என்றார். 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தப்ளிக் விழா: டில்லி விமான நிலையத்தில் 8 மலேசியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்! 960 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர்

இந்தியாவின் டில்லியில் நடைபெற்ற தப்ளிக் சமய விழாவில் கலந்து கொண்ட

மேலும்
img
மோடிக்கு பயங்கரவாதிகள் குறி

பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பு டிச.22ஆம் தேதி

மேலும்
img
இந்தியா இமாலய வெற்றி!

ரோகித், ராகுல் சதம்

மேலும்
img
கைலாசாவை அமைத்தே தீருவேன்... நித்தியானந்தா பேச்சு: 40 லட்சம் பேர் விண்ணத்துள்ளனர்

தம்முடைய கைலாசா நாட்டின் குடிமக்கள் ஆவதற்கு உலகெங்கிலுமிருந்து 40 லட்சம்

மேலும்
img
ஐஎஸ் அமைப்புக்கு தொடர்பு இல்லை மறைமுக சதியே காரணம் 

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img